/* */

4 மாநில தேர்தலில் பாஜக வெற்றி: கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்

புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்

HIGHLIGHTS

4 மாநில தேர்தலில் பாஜக வெற்றி:  கேக் வெட்டி  பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்
X

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் 4 மாநில தேர்தலில் வெற்றியை புதுக்கோட்டை பாஜகவினர் கேக் வெட்டி கொண்டாடினார்

4 மாநில தேர்தலில் பாஜக வெற்றி புதுக்கோட்டையில் பாஜக நிர்வாகிகள் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர். .பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 5 மாநில தேர்தல் நடைபெற்று முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ஆளுகின்ற மத்திய பாஜக மோடி அரசின் பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்து வந்த நிலையில் 5 மாநில தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. வியாழக்கிழமை காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்து, பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற 4 மாநிலத்திலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வைத்தது.

தொடர்ந்து முன்னிலை வகித்த பாஜக மீண்டும் உத்தரபிரதேசத்தில் ஆட்சியைக் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியது. அதேபோல் மீதமுள்ள மூன்று மாநிலத்திலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கிறது. .பாரதிய ஜனதா கட்சி வெற்றியை பல்வேறு மாநிலங்களில் பாஜக நிர்வாகிகள் கேக் வெட்டி பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேக் வெட்டி பட்டாசு வெடித்தும் வெற்றியை கொண்டாடினர்.இந்த நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொறுப்பாளர் செல்வ அழகப்பன், மாநில துணைத்தலைவர் புரட்சிதாசன், மாவட்ட தொழில் பிரிவு தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Updated On: 10 March 2022 2:37 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?