/* */

புதுக்கோட்டையில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

புதுக்கோட்டையில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
X

புதுக்கோட்டையில் தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக இருக்கும் பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை செய்து கொண்டாடி வருவது வழக்கம்.

ஆனால், கடந்த வருடங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு கூட்டு தொழுகைக்கு அனுமதி அளிக்காததால் பக்ரீத் மட்டும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் கொண்டாடாமல் தங்களது வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், இந்த வருடம் பக்ரீத் பண்டிகைக்கு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஈடுபடுவதற்கு தமிழக அரசு அனுமதியை வழங்கியுள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத்தக பள்ளிவாசலில் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தும் முகக்கவசம் அணிந்து அரசு அறிவித்த நெறிமுறைகளின்படி பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

அதுமட்டுமல்லாமல் பக்ரீத் பண்டிகை முடிந்த உடன் இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்து கொள்வார்கள். ஆனால், தற்போது வைரஸ் தொற்று காரணமாக அது போன்ற நிகழ்வுகள் பள்ளிவாசல்களில் நடைபெறக் கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

Updated On: 21 July 2021 3:21 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?