பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவைபுரிந்த சமூக சேவகர்- தொண்டு நிறுவனத்துக்கு விருது

Award for Social Worker-Charity for her contribution to the women

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவைபுரிந்த சமூக சேவகர்- தொண்டு நிறுவனத்துக்கு விருது
X

பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெற வரும் 30.06.2022 -க்குள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத் திற்கான விருதுகள் தமிழக முதலவரால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப் பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து 2022-2023 -ஆம் நிதியாண்டிற்கான சுதந்திர தின விழாவின் போது சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதால் இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையத்தில் (https://awards.tn.gov.in) பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி அரசாணையின்படி சிறந்த சமூக சேவகர் (மற்றும்) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கும் பொருட்டு கருத்துருக்களை அனுப்புவதற்கான விதிமுறைகள் வருமாறு: தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும்; வகையிலான நடவடிக்கைகள்.

மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற் றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூகசேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவன மாகவும் இருத்தல் வேண்டும்.எனவே புதுக்கோட்டை மாவட் டத்தில் தகுதியான சமூக சேவகர்களிடமிருந்தும் அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்கள் வரும் 30.06.2022- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை 04322-222270 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுதெரிவித்துள்ளார்.

Updated On: 22 Jun 2022 10:30 AM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
 2. திருமங்கலம்
  கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
 3. தமிழ்நாடு
  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
 4. இலால்குடி
  திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 6. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 7. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 8. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்