/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் 334 தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கை

மாவட்டத்திலுள்ள 543 வாகனங்களில் 334 வாகனங்கள் தணிக்கை செய்து தகுதியுள்ள வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் 334  தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கை
X

 புதுக்கோட்டை காவல் துறையின் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன், குழந்தைசாமி ஆகியோர் முன்னிலையில் 334 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 543 தனியார் பள்ளி வாகனங்கள் ஆண்டு தணிக்கை செய்யப்பட்டன

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டும் விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிடவும், மாவட்ட நிர்வாகம் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி சாலைப் பாதுகாப்பு குறித்து அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடவும், ஓட்டுநர் களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்திடவும், அனைத்து பள்ளி வாகனங்களையும் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அறந்தாங்கி, இலுப்பூர், ஆலங்குடி ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் எல்லைகளுக்குள் இயங்கக்கூடிய மொத்தம் 543 பள்ளி வாகனங்களும் (26.05.2023 ) இன்று ஆய்வு மேற்கொள்ள பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது

அதன்படி, புதுக்கோட்டை காவல் துறையின் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன், குழந்தைசாமி ஆகியோர் முன்னிலையில் 334 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில், விதிகளை நிறைவேற்றாமவ் கொண்டு வரப்பட்ட 22 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மீதமுள்ள 207 பள்ளி வாகனங்கள் பழுது நீக்கப்பணி முடிவடைந்த பின்னர் 31.05.2015 க்குள் மறு ஆய்விற்கு உட்படுத்த பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச் சான்று, அனுமதிச்சீட்டு, ஒட்டுநர் உரிமம், நடத்துநா; உரிமம், வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி, தீயணைப்பு கருவி, சிறப்பு படிக்கட்டு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், ஊர்தி இயக்கப்பதிவேடு, நடப்பில் உள்ள முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, ஓட்டுநர் பெயர்வில்லை பொருத்திய உரிய சீருடையுடன் ஓட்டுனர்கள் வருகை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

இதில், காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், போக்குவரத்து ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதிச் சீட்டினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Updated On: 26 May 2023 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!