/* */

அனைத்து பள்ளி கல்வி வாகனங்களும் வரும் 22 -ஆம் தேதி ஆய்வு செய்யப்படும்: ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட உள்ளன.

HIGHLIGHTS

அனைத்து பள்ளி கல்வி வாகனங்களும் வரும் 22 -ஆம் தேதி   ஆய்வு செய்யப்படும்: ஆட்சியர்
X

வருகின்ற 22ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்கள்   ஆய்வு செய்யப்பட உள்ளன என  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  அறிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில்அனைத்து பள்ளி கல்வி வாகனங்கள் வருகின்ற 22 ம் தேதி காலை 9 மணிக்கு ஆய்வு செய்யப்பட உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டும்விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிடவும், மாவட்ட நிர்வாகம் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி சாலைப் பாதுகாப்பு குறித்து அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களின்பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடவும், ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்திடவும், அனைத்து பள்ளி வாகனங்களையும் ஒரே நாளில், ஒரே இடத்தில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 22.10.2021 அன்று காலை 9.00 மணிக்கு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி கல்வி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட உள்ளன. எனவே, ஆய்விற்கு வரும் வாகனங்களோடு, ஓட்டுநர்கள்அவ்வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம்,நடத்துனர் உரிமம், ஊர்தி இயக்கப்பதிவேடு, நடப்பில் உள்ள முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு கருவி, ஓட்டுநர் பெயர்வில்லை பொருத்திய உரிய சீருடையுடன் ஆய்விற்கு 22.10.2021 அன்று கொண்டுவருமாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார். இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதிச் சீட்டினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று மாவட்ட கவிதா ராமு தெரிவித்துள்ளார்.


Updated On: 19 Oct 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...