/* */

வாக்காளர்களுக்கு மின் கட்டண அட்டை வழங்கி பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளர் தவமணி

வாக்காளர்களுக்கு மின் கட்டண அட்டையை வழங்கி பிரச்சாரம் செய்து வரும் அதிமுக வேட்பாளர் தவமணி

HIGHLIGHTS

வாக்காளர்களுக்கு மின் கட்டண அட்டை வழங்கி பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளர் தவமணி
X

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 23வது வார்டு சார்லஸ் நகரில் குப்பைகளை சுத்தம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ஏ.டி மணி என்ற தவமணி

வாக்காளர்களுக்கு மின் கட்டண அட்டையை வழங்கி பிரச்சாரம் செய்து வரும் அதிமுக வேட்பாளர் தவமணி.

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகராட்சி, மாநகராட்சி பேரூராட்சி ,தேர்தல் நடைபெற இருக்கிறது.இதற்கான பிரசாரத்தை அதிமுக ,திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தற்போதைய தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 23 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் மணி என்ற தவமணி.இன்று சார்லஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களை நேரடியாக சந்தித்து தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது சாலையோரத்தில் கிடந்த குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பொருட்களை கொண்டு சாலையில் கிடந்த குப்பைகளை சுத்தம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மின் இணைப்பு கட்டணத்தை அறிந்துகொள்ளும் விதத்தில் தன்னுடைய பிரச்சார துண்டுப் பிரசுரமாக மின்கட்டண அட்டையை அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கியும் வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அதிமுக வேட்பாளர் தவமணி

Updated On: 6 Feb 2022 3:15 PM GMT

Related News