/* */

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி மாசு இல்லாமல் பட்டாசு வெடிக்க நடவடிக்கை

கூடங்குளம்அணுக்கழிவுகளை இதுவரை அகற்றவில்லை உடனடியாக அகற்ற வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்

HIGHLIGHTS

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி   மாசு இல்லாமல் பட்டாசு வெடிக்க நடவடிக்கை
X

சுற்றுச்சூழல்துறை  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் 

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி தீபாவளி பண்டிகையின் போது மாசு இல்லாமல் பட்டாசு வெடிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டையில் இளைஞர் அமைப்பு சார்பில் இன்டோர் கிரிக்கெட் சென்டர் தொடக்க விழா நடைபெற்றது சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கிரிக்கெட் சென்டரை தொடங்கி வைத்தார்

இதன் பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இன்னும் 2 ஆண்டுகளில் காவிரியில் எவ்விதமான கழிவும் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் இதற்காக வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளம்அணுக்கழிவுகளை இதுவரை அகற்றவில்லை.உடனடியாக அகற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.அதனைப் பொறுத்து தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்

தமிழக முதல்வர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சுற்றுச்சூழல் துறை என்பதை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை என்று மாற்றி சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகரில் உள்ள ஏரிகள் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஆறுகள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை வரும் ஐந்து ஆண்டு காலங்களில் மாசற்ற நிலையை கொண்டு வருவது தான் அரசின் லட்சியம்

ஐந்து ஆண்டு காலத்தில் காவிரி பாலாறு தாமிரபரணி காலிங்கராயன் கால்வாய் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.கோவையில் கயிறு தொழிற்சாலைகளால் பரம்பிக்குளம் ஆழியாறு மாசு படுவதாக தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து முதல்வர் உத்தரவுபடி தொழிற்சாலைகள் நவீன தொழில் நுட்பத்துடன் ஆற்று நீரை தூய்மைப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது

நெகிழி பயன்பாட்டை முற்றிலுமாகத் அகற்றுவது தான் தமிழக அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதற்கு மாற்றாக நூலால் நெய்யப்பட்ட பைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டம் நெகிழி இல்லாத மாவட்டமாக திகழ்கிறது ஒவ்வொரு மாவட்டமாக இதுபோன்று நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றப்படும்

தமிழகத்தில் பட்டாசுகள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கிடையில் மாசு கட்டுப்பாட்டு துறை சார்பில் பட்டாசு வெடித்தால் எவ்வளவு மாசு ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் 20 சதவீதம் பேர் விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.2014ஆம் ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டது.

அணுக்கழிவுகளை எவ்வாறு அகற்ற வேண்டுமென்று ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படாமல் அணுக் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது.தமிழக முதல்வர் நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு மூலமாக மத்திய அரசிற்கு அணுக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே தமிழகத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற மாநிலமாக மாற்றி காட்டுவேன் என்று கூறி பொறுப்பேற்று உள்ளார். அதனடிப்படையில் முதல்வரின் செயல்பாடு உள்ளது .இந்த மண்ணிற்கும் நாட்டிற்கும் மாசு ஏற்படும் எந்த திட்டத்தையும் முதல்வர் அனுமதிக்க மாட்டார்.அணுக்கழிவுகள் தொடர்பாக முதலமைச்சர் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் மத்திய அரசின் நடவடிக்கை பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை தமிழக அரசு எடுக்கும் தமிழகத்தில் நான்கு இடங்களில் ஒலிம்பிக்ஸ் அகாடமி அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுவிட்டது. அதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 6ஆம் தேதியே ஆறு குழுக்களை மாசு கட்டுப்பாட்டு துறை அமைத்துவிட்டது.அவர்கள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.கண்டிப்பாக 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் எந்த சாயக்கழிவு மருத்துவ கழிவுகள் காவிரியில் கலக்காதவாறு மிகச்சிறந்த நடவடிக்கை இருக்கும்.ஐஐடி வல்லுநர்கள் மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆகியோர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள்ள் நடைபெற உள்ளது என்றார்.

Updated On: 10 Oct 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
  2. அரசியல்
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  4. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  5. சேலம்
    மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  6. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்