/* */

ஊரடங்கைப்பயன்படுத்தி சட்டவிரோதமாக மது விற்றால் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீது இதுவரை 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ஊரடங்கைப்பயன்படுத்தி சட்டவிரோதமாக  மது  விற்றால்  நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை
X

முழு ஊரடங்கையொட்டி புதுக்கோட்டை நகரில்  ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீது இதுவரை 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பேட்டி.

தமிழகத்தில் ஓமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளும் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கையும் அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஊரடங்கு காலகட்டத்தில் இல்லாதது போல் தற்போது மக்கள் மத்தியில் காவல்துறை சார்பில் கடந்த ஒரு வார காலமாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியதின் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் மக்கள் நடமாட்டம் முற்றிலுமாகு குறைந்துள்ளது. எனவே ஒமைக்ரான் தொற்று குறித்து மக்கள் மத்தியில் அச்சம் காரணமாக முழு ஊரடங்கு கடைப்பிடித்து யாரும் வெளியே வராத நிலையில் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு பொதுமக்களும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

மேலும் அரசு அறிவித்துள்ள விதி முறைகளான பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இது போன்ற விழிப்புணர்வு இல்லை. அவ்வப்போது காவல்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் அவர்களின் நலன் கருதி அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் மற்றும் தேவையான உதவிகள் செய்து கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தவர்கள் மீது இதுவரை 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை பயன்படுத்தி எங்கேயாவது விதிமுறைகளை மீறி யாராவது மதுபானங்களை விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Updated On: 9 Jan 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்