/* */

ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்

Voter Id And Aadhaar Link - புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து இணைத்துக் கொள்ள வேண்டும்

HIGHLIGHTS

ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்
X

பைல் படம்

Voter Id And Aadhaar Link - புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல்.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலினை 100% தூய்மையாக்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளர் தகவல்களை ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 01.08.2022 முதல் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையத்திலும் அல்லது வாக்காளர் உதவி மையம் (Voter Help Line – VHP) என்ற செயலி மூலமாகவும், அல்லது வாக்குசாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் - 6Bயில் (வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் படிவம்) பூர்த்தி செய்து கொடுத்தும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம், இ-சேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவை அணுகியும் ஆதார் விவரங்களை சமர்பித்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 Aug 2022 10:24 AM GMT

Related News