/* */

சுயதொழில் முனைப்புடன் 70 வயது மூதாட்டி…! உதவிக்கரம் நீட்டிய கலெக்டர்

யார் தயவுமில்லாமல்பிழைக்க வழிகேட்ட 70 வயது மூதாட்டிக்கு ஆதரவுக்கரம் கொடுத்த புதுக்கோட்டை கலெக்டருக்கு மக்கள் பாராட்டு

HIGHLIGHTS

சுயதொழில் முனைப்புடன் 70 வயது மூதாட்டி…!  உதவிக்கரம் நீட்டிய கலெக்டர்
X

புதுக்கோட்டையில் 70 வயது மூதாட்டிக்கு அரசின் ஆதரவுக்கரம் கொடுத்த புதுக்கோட்டை கலெக்டர் கவிதாராமு

புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியைச் சேர்ந்த மீனா( 70 ) மூதாட்டி இரண்டு வாரங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு புது குளக்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ள வரும்பொழுது, தனக்கு பெட்டிக்கடை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் மூன்றாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய குடும்ப அட்டை தொலைந்து விட்டது. வறுமையில் வாடும் எனக்கு உதவிட வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார் .

அதனை நிறைவேற்றும் விதமாக, இன்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புது குளக்கரையில் 70வயதான மூதாட்டி மீனாவிற்கு கடை நடத்த அனுமதியளித்தார். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன குடும்ப அட்டைக்கு பதிலாக, புதிய குடும்ப அட்டையினையும் நேரடியாகச் சென்று வழங்கி மூதாட்டியை வியப்பில் ஆழ்த்தினார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

Updated On: 24 Aug 2021 4:23 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  5. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  6. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  7. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  8. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  9. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  10. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...