/* */

புதுக்கோட்டையில் 44 வது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டம்

44th Chess Olympiad Celebration at Pudukkottai

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் 44 வது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டம்
X

புதுக்கோட்டை மவுன்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்

புதுக்கோட்டையில் 44வது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மவுண்ட் சியோன் மெட்ரிக் பள்ளியில் 44வதுசதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியருக்கான சதுரங்க போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.

போட்டியினை மவுண்ட் சியோன் மெட்ரிக் பள்ளிநிர்வாகி ஜோனத்தன் ஜெயபரதன் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சதுரங்க துணைத் தலைவர் அடைக்கலவன் தலைமை வகித்தார். செயலாளர் பேராசிரியர் கணேசன் வரவேற்றார். சதுரங்க பயிற்சியாளர் சியாம் சுந்தர் முன்னிலை வைத்தார் .

போட்டியில் வெற்றி பெற்ற முதல 5 இடம்பிடித்த மாணவிகள் நவசக்தி ராஷ்மிகா ஸ்ரீ கவுசல்யா தாமரைச்செல்வி ,சன்மதி, ஸ்ரீநிதி செல்லப்பா முதல் 5 இடம் பிடித்த மாணவர்கள் கமலேஷ்வர் , விஸ்வநாதன் , சஞ்சித் ஆரீஸ் இம்ரான், நவின் , ரோஹித் தங்கம் சிறுவர் சிறுமிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா விருதுகள் நற்சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் சர்வதேச செஸ் கிராண்ட்மாஸ்டர் சதுரங்க பயிற்சியாளர் சியாம் சுந்தர் வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமிகளை வாழ்த்தி பேசினா.ர் நிகழ்வில் சதுரங்கப் போட்டி நிர்வாகிகள் பயிற்சியாளர்கள் ஜெயராமன் அங்கப்பன், புதுகை செல்வம், ஸ்ரீதர், பார்த்திபன் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக வினிதா செல்வம் நன்றி கூறினார்.

Updated On: 13 Jun 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!