/* */

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளில் வேட்டையாட வந்த 20 பேர் கைது

வேட்டை நாய்கள், வேட்டையாடுவதற்கு பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகளை பறிமுதல் செய்ததோடு 20 பேரையும் கைது செய்தனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளில்  வேட்டையாட வந்த 20 பேர் கைது
X

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மற்றும் விராலிமலை பகுதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் மான் மயில் முயல் போன்ற விலங்குகளை வேட்டையாட வந்த 20 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் நார்த்தாமலை பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதியில் முயல் மயில் மற்றும் மான் ஆகிய விலங்குகளை வேட்டையாட வந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை நார்த்தாமலை உள்ளிட்ட பகுதிகள் காடுகள் நிறைந்த பகுதியாகும் இங்கு முயல் மயில் மான் உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் விராலிமலை பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் காட்டுப்பகுதிகளில் மான், மயில்,முயல் உள்ளிட்டவைகளை வேட்டையாடுவதற்காக மினி லாரியில் குடுமியான்மலை அருகே சென்றுள்ளனர்.அப்போது அந்த வழியாக மாவட்ட வனத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர்

சந்தேகப்படும் படியாக சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் அனைவரும் வேட்டையாட வந்தது தெரியவந்தது .மேலும் அவர்களிடமிருந்து நான்கு வேட்டை நாய்கள் மற்றும் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தக்கூடிய கம்புகள் உள்ளிட்ட பல்வேறு கருவிகளை பறிமுதல் செய்து 20 பேரையும் கைது செய்து புதுக்கோட்டை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்..அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூல் செய்வதற்கு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  3. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  8. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  9. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  10. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!