விவசாயிடம் ஏடிஎம் கார்டை மாற்றி நூதன முறையில் 1.74 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது

இளைஞரிடம் இருந்து 17 ஏடிஎம் அட்டைகள் 1 லட்சம் மதிப்புள்ள 4 செல்போன்கள் ரூ. 10 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விவசாயிடம் ஏடிஎம் கார்டை மாற்றி நூதன முறையில் 1.74 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது
X

புதுக்கோட்டையில் விவசாயிடம் ஏடிஎம் கார்டை ஏமாற்றி பணம் எடுத்து மாட்டிக் கொண்ட இளைஞர் காட்ஜான்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் பணம்

விவசாயிடம் ஏடிஎம் கார்டை மாற்றி, நூதன முறையில் 1.74 லட்சம் மோசடி செய்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை பாலன் நகரைச் சேர்ந்த சேர்ந்த சதாசிவம் (57).விவசாயியான இவர் கடந்த 7ஆம் தேதி கீழ ராஜ வீதியில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது, அங்கே நின்று கொண்டிருந்த, கரூர் மாவட்டம், வேதாசலபுரத்தை சேர்ந்த காட்ஜான்(20) என்ற இளைஞரிடம் தனது கார்டைக் கொடுத்து பணம் எடுத்து தர சொல்லி உள்ளார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட காட்ஜான்அவரது ஏடிஎம் கார்டை மாற்றி போலியான ஒரு ஏடிஎம் கார்டை விவசாயி சதாசிவத்திடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த கார்டை பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.74 லட்சம் ரூபாய் பணத்தை காட்ஜான் எடுத்து ஆடம்பரமாக கடந்த 20 நாட்களாக செலவு செய்து வந்துள்ளார்.

தனது ஏடிஎம் கார்டை மாற்றி அதில் உள்ள பணத்தை எடுத்து அந்த இளைஞன் செலவு செய்து வருவதை அறிந்த சதாசிவம் இதுகுறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடி செய்த சம்பவத்தில் ஈடுபட்ட காட்ஜானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அந்த இளைஞரிடம் இருந்து 17 ஏடிஎம் அட்டைகள் ஒரு லட்சம் மதிப்புள்ள 4 செல்போன்கள் 10 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 26 Nov 2021 3:20 AM GMT

Related News