அரசுப்பள்ளிக்கு ஒரு லட்சம் மதிப்பில் கல்வி உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்

அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் ஆசிரியர் குணசேகரன் அப்பள்ளி மாணவர்களுக்கு அகராதியை வழங்கினார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரசுப்பள்ளிக்கு ஒரு லட்சம் மதிப்பில் கல்வி உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்
X

அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் என்கிற முறையில் அந்தப்பள்ளியில் படிக்கும் அத்தனை மாணவர்களக்கும் சுமார் 30 ஆயிரம் மதிப்பிலான அகராதியை ஆசிரியர் குணசேகரன் புதன்கிழமை வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒரு லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அரையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தி.குணசேகரன். இவர் வல்லத்திராகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகவும், உதவித் தலைமை ஆசிரியராகவும் உள்ளார். இவர் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செயது வருகிறார்.

இவரது சேவைகளைப் பாராட்டி பல்வேறு சமூக மற்றும் தன்னார்வ அமைப்புகள் இதுவரை 22 விருதுகளை வழங்கி கௌரவித்து இருக்கின்றன. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராக ஒன்பது வருடங்கள் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் களப்பணியில் இறங்கி மக்களுக்கு பொருள் மற்றும் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.

இந்நிலையில், அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் என்கிற முறையில் அந்தப்பள்ளியில் படிக்கும் அத்தனை மாணவர்களக்கும் சுமார் 30 ஆயிரம் மதிப்பிலான அகராதியை ஆசிரியர் குணசேகரன் புதன்கிழமை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் எஸ்.ஆர்.வடிவேலு, கல்விக்குழுத் தலைவர் ச.சிங்காரம், பள்ளித் தலைமை ஆசிரியர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர் ஏற்கெனவே இந்தப் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் மணி ஒலிப்பான், ரூ.15 ஆயிரம் மதிப்பில் மேசைகள், மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டிக்கா ரூ.50 ஆயிரம் என வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய மாணவர் அல்லது முன்னாள் மாணவர் என்பவர், முன்னாட்களில் பயின்ற கல்லூரி மாணவர் களையும், முன்னாட்களில் பயின்ற பள்ளி மாணவர்களையும் குறிக்கும் சொல். பல மாணவர்கள் கல்லூரி முடிந்த பின்பும் தொடர்பில் இருப்பர். பலர் அமைப்பு நோக்கிலும் செயற்படுவர்.

தமிழகத்தில் பல பள்ளி, கல்லூரிகளில் முன்னாள் மாணவர் சங்கம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இவ்வமைப்புகள் தம்முடைய முன்னாள் மாணவர்களையும் இந்நாள் மாணவர்களையும் இணைக்கும் பொருட்டு செயல்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும்போதோ இவ்வமைப்புகளின் கூட்டம் கூட்டப்பெற்று, அந்த ஆண்டில் நடைபெற்ற பணிகள், அடுத்த ஆண்டு செயல்படுத்த வேண்டிய மாணவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் போன்றவற்றைப்பற்றிய கலந்துரையாடல் நடைபெறும்.

Updated On: 1 Feb 2023 1:30 PM GMT

Related News

Latest News

 1. சினிமா
  எம்.ஜி.ஆரும் தென்னிந்திய நடிகர் சங்கமும்
 2. தமிழ்நாடு
  சாதி, மதம் இல்லா முதல் சான்றிதழ்: சினேகாவை பாராட்டிய நடிகை குஷ்பு
 3. கரூர்
  கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி
 4. கல்வி
  employment training workshop-JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும்...
 5. கரூர்
  பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்துக்கு ரூ. 1 கோடி...
 6. தூத்துக்குடி
  அண்ணன் பாணியில் தங்கை: சாலையோர கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி...
 7. கரூர்
  கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
 8. லைஃப்ஸ்டைல்
  வாழை இலையில ரசம் செஞ்சு இருக்கீங்களா...... அட அட ஊரே மணக்கும்
 9. கல்வி
  students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான...
 10. பேராவூரணி
  பேராவூரணி அருகே கடை வைத்து 5 ரூபாய்க்கு தேனீர் விற்கும் முன்னாள்...