/* */

மக்காச்சோளம் பயிரில் பூச்சி மேலாண்மை: விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை

மக்கா சோள பயிரைத்தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

மக்காச்சோளம் பயிரில் பூச்சி மேலாண்மை: விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை
X

விவசாயிகள் தாங்கள் சாகுபடி மேற்கொண்டுள்ள பயிர்களுக்கு ஜூலை மாதத்திற்கான பூச்சி மற்றும் நோய் முன்னறிவிப்பு மற்றும் மேலாண்மை முறைகள் ஆகியவற்றிற்கான ஆலோசனையை வேளாண்துறை வெளியிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம் மற்றும் தென்னை ஆகிய பயிர்களுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஜூலை மாதத்திற்கான பூச்சி மற்றும் நோய் முன்னறிவிப்பு பெறப்பட்டுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி மேற்கொண்டுள்ள நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தென்பட்டால் ஒரு ஏக்கருக்கு ஸ்டெப்ட்ரோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலந்த மருந்து 120 கிராம் மற்றும் காப்பர் ஆக்சி குளோரைடு 500 கிராம் ஆகியவற்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

மேலும், குலைநோயின் தாக்குதலைக் கட்டுப்படுத்திட ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் என்ற மருந்தை 200 கிராம் அல்லது மெட்டோமின்ஸ்ட்ரோபின் 200 மி.லி. அல்லது அசாக்சிஸ்ட்ரோபின் 200 மி.லி. இவற்றில் ஏதாவது ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

மக்காச்சோள சாகுபடியில் படைப்புழுவினைக் கட்டுப்படுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சாகுபடிக்கு முன்னதாக மக்காச்சோள விதைகளை சயாந்த்ரானிலிப்ரோல் மற்றும் தயாமீத்தாக்சம் கலந்த கலவையினை கிலோவிற்கு 4 மி.லி. மருந்தினை கலந்து விதை நேர்த்தி செய்து கட்டுப்படுத்திடலாம்.

தென்னைச் சாகுபடியில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை, என்கார்சியா ஒட்டுண்ணி ஒரு ஏக்கருக்கு 100 எண்கள் மற்றும் ஒரு ஏக்கருக்கு 500 எண்கள் கிரைசோபெர்லா இரைவிழுங்கி வெளியிடுவதன் மூலமாகவும் ஐந்து அடிக்கு ஒன்றரை அடி அளவுள்ள ஆமணக்கு எண்ணெய் தடவிய மஞ்சள்நிற ஒட்டும் பொறிகளை ஒரு ஏக்கருக்கு 8 எண்கள் வீதம் கட்டித் தொங்கவிடுவதால் சுருள் வெள்ளை ஈக்களைக் கவர்ந்தழிக்கலாம். மேலும், எந்தவிதமான பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதையும் விவசாயிகள் தவிர்த்து தென்னந்தோப்புகளில் நன்னை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பதன் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம்.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து அதிக மகசூல் பெற்றுப் பயன் பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ.) சக்திவேல் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Updated On: 17 July 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  2. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  4. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  5. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  6. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  7. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  9. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  10. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு