/* */

பல்வேறு தட்ப வெப்ப நிலைகளில் கூடுதல் மகசூல் தரக்கூடிய முக்கியமான தானியம் குதிரைவாலி

Kuthiraivali Rice- பல்வேறு மாவட்டங்களில் குதிரை வாலி தானியம் பயிரிடப்பட்டு வருகிறது. 1 ஏக்கருக்கு 1 டன் முதல் 2 டன் மகசூல் பெறலாம்

HIGHLIGHTS

பல்வேறு தட்ப வெப்ப நிலைகளில்  கூடுதல் மகசூல் தரக்கூடிய முக்கியமான தானியம் குதிரைவாலி
X

குதிரை வாலி சிறுதானியம் (பைல் படம்)

Kuthiraivali Rice- வறட்சிக்கு உள்ளாகும் விளை நிலங்கள் ,வௌ்ளப்பெருக்கு நிறைந்த வளம் குறைந்த நிலங்கள் மற்றும் பல்வேறு தட்ப வெப்ப நிலைகளில் நிறைவான மகசூல் தரக்கூடிய முக்கியமான தானியம் குதிரைவாலியாகும். குதிரைவாலி தானியமாகவும், கால்நடைகளுக்கு தீவனப்பயிராகவும் பயனளிக்ககூடியது. தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் குதிரை வாலி பயிரிடப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் குதிரைவாலியினை பயிரிடுமாறு வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது .

சிறுதானியங்களின் ஊட்டச்சத்து: பொதுவாக அரிசி மற்றும் கோதுமையினை விட சிறுதானியங்களில் அதிக அளவு ஊட்டச்சத்து இருப்பதாக அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்களில் புரதம் ,நார்ச்சத்து , நியாசின் தலாமின் மற்றும் ரிபோபிளேவின் ஆகிய வைட்டமின்களும், இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியன அதிக அளவில் உள்ளன. சிறுதானியங்களில் அதிக அளவு இரும்புச்சத்து அதாவது 18.60மி.கி-100கி என்ற அளவில் குதிரைவாலியில் உள்ளது. மேலும் அதிக அளவு நார்ச்சத்து 13.6 கி -100கி -க்கு கொண்ட தானியம் குதிரைவாலியாகும்.

உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு: உடலுக்கு வலிமை சோ்க்கின்றது.இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றது.ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் வராமல் இருப்பதற்கு உதவுகின்றது.உடல் பருமன் கொண்டவா;களின் உடல் எடை சீராக குறைகிறது.இதனை உணவில் அதிக அளவில் சேர்க்கும் பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் நம் சராசரி ஆரோக்கியத்திற்கும் சிறுதானியங்கள் பெரிதும் துணைபுரிகின்றன.நார்ச்சத்து அதிகம் இருப்பதனால் மலச்சிக்கலை தடுப்பதிலும் துணைபுரிகிறது.

பருவம் மற்றும் இரகங்கள்: குதிரைவாலி , 300 மி.மீ முதல் 350 மிமீ வரை மழை பொழியும் இடங்களில் கூட வளரக்கூடிய மானாவாரி பயிராக ஆடி (ஜுலை - ஆகஸ்ட்) மற்றும் புரட்டாசி (செப்டம்பர் -அக்டோபா) பட்டங்களில் பயிரிடலாம்.அதிக விளைச்சல் தரக்கூடிய கோ-1 , மற்றும் கோ-2 ஆகிய இரகங்களை சாகுபடி செய்யலாம் .110 நாள் வயதுடையது. குதிரைவாலி பயிர் ஒரு எக்டருக்கு 1000-2000கிகி வரை மகசூல் தரவல்லது.

நிலம் தயார் செய்தல்: நிலத்தை மூன்று முறை நன்றாக புழுதி உழவு செய்து களைகள் இல்லாதவாறு நிலத்தை பண்படுத்த வேண்டும் . நிலத்தை சமன் செய்து 3மீ x 3மீ அளவுள்ள பாத்திகள் அமைக்க வேண்டும் .

விதையளவு:வரிசை விதைப்புக்கு ஒரு எக்டருக்கு 10 கி.கி -வும் ,தூவுவதற்க்கு 12.5 கி.கி -வும் தேவைப்படும். வரிசைக்கு வரிசை -22.5 செ.மீ.இடைவெளியும் , செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளிவிட்டு விதைப்பு செய்ய வேண்டும்.

விதை நேர்த்தி: விதை மற்றும் மண்ணின் மூலமாக பரவும் நோயகளின்; தாக்குதலை தடுப்பதற்காகவும் தாக்குதலைக் குறைப்பதற்க்காகவும் விதை நேர்த்தி செய்வது அவசியமாகும்.டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோவிற்கு 4 கிராம் அல்லது சூடோமோனஸ் ஒரு கிலோவிற்க்கு 10 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்திட வேண்டும்.உயிர் உர நேர்த்தி விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை தலா 3 பாக்கெட் அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீயா உயிர் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்கவும் .

உரமிடுதல்:ஒரு எக்டர் நிலத்தில் அடியுரமாக 5-10 டன்கள் மக்கிய தொழுஉரத்தினை கடைசி உழவின் போது இட்டு உழவேண்டும். பின்னா; 20 கிலோ தழை மற்றும் 20 கி மணிச்சத்தினை அடியுரமாக விதைப்பின் போது இடவேண்டும்.பின்னர் மீதமுள்ள 20 கி மணிச்சத்து மற்றும் 20 கி தழைச்சத்தினை 20-25 நாட்களுக்குள் மழை பெய்யும் பொழுது மண்ணில் ஈரம் இருக்கும் பொழுது மீண்டும் இடவேண்டும்.

களைக்கட்டுப்பாடு:விதைத்த 18-ம் நாள் ஒரு களையும் , 45-ம் நாள் மற்றொரு களையும் எடுக்கவேண்டும்.

பயிர் களைதல் : முதல் களை எடுத்தவுடன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊடு உழவு செய்து பயிர்களை களைந்து தேவையான பயிர் எண்ணிக்கையினை பராமரிக்க வேண்டும். பயிர் பாதுகாப்பை பொறுத்தவரையில் பொதுவாக பூச்சிகள் அதிக அளவில் தாக்குவதில்லை .மேலும் காரப்பூட்டை நோயினை தடுப்பதற்க்கு பூஞ்சான கொல்லி விதை நேர்த்தியான எதிர் உயிரிகளை சூடோமோனஸ் ,டிரைகோடர்மாவிரிடி போன்றவை கொண்டு அவசியம் செய்திடல் வேண்டும் .

அறுவடை : கதிர்கள் நன்கு முற்றிய பிறகு அறுவடை செய்து களத்தில் காயவைத்து பின் தானியங்களை பிரித்தல் வேண்டும். பின்னர் காற்றில் தூற்றி தானியங்களை தூசி நீக்கி சுத்தம் செய்திட வேண்டும். ஒரு எக்டரில் ஏறத்தாழ 1000 முதல் 2500 கி கி வரை மகசூல் கிடைக்கும் .4 முதல் 5 டன்கள் தீவன மகசூல் கிடைக்கும் .குதிரை வாலி மற்றும் சிறுதானியங்களை தானியக்கியிலிருந்து அரிசியினை பிரித்தெடுக்க தற்பொழுது தேவையான இயந்திரங்கள் உள்ளது. இதனைக் கொண்டு குதிரை வாலி அரிசியினை எடுத்து சந்தைப்படுத்தலாம்.

தற்பொழுது சிறு மற்றும் குறு தானியங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வகை தானியங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளதனால் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உடல் பலம் கிடைக்கிறது. குதிரைவாலி அரிசியினை கொண்டு குதிரைவாலி பிரியாணி ,பொங்கல், பாயாசம் , சர்க்கரை பொங்கல், புட்டு போன்ற உணவுகளை தயார் செய்து சாப்பிடலாம் .எனவே விவசாயிகள் குதிரைவாலி சாகுபடியினை மேற்கொண்டு , தானும் பயன்படுத்தி பிறருக்கும் கிடைக்குமாறு சந்தைப்படுத்தினால் நல்ல இலாபம் பெறலாம் வேளாண்மை துறை யோசனை தெரிவித்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Updated On: 1 Aug 2022 4:25 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு