/* */

பச்சைத்தங்கம் ஏழைகளின் மரம் மூங்கில் : 24 மணி நேரமும் ஆக்சிஜனைத் தருகிறது

உருளை மூங்கில் 24 நான்கு மணிநேரமும் ஆக்ஸிஜன் தருகிறது சிறந்த காகிதம் தயாரிப்புக்கு உகந்த மரம்

HIGHLIGHTS

பச்சைத்தங்கம் ஏழைகளின் மரம் மூங்கில் :   24 மணி நேரமும் ஆக்சிஜனைத் தருகிறது
X

பைல் படம்

இந்தியாவில் வளரும் மூங்கில்கள் தொழிற்சாலைகளுக்குத்தான் பெரும்பாலும் பயன்படுகின்றன. 40 சதவிகிதம் மூங்கில்கள் காகிதத் தொழிற்சாலைகளிலும், மரக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம் என அழைக்கப்படுகிறது மூங்கில்.

செப்டம்பர் 18. உலக மூங்கில் தினம். 2009-ம் ஆண்டு பாங்காக்கில் உலக எட்டாவது மூங்கில் மாநாடு (world bamboo congress- WBC) நடந்தது. அன்று முதல் இந்த நாளை உலக மூங்கில் தினமாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினம் உலக மூங்கில் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வளரும் மூங்கில்கள் தொழிற்சாலைகளுக்குத்தான் பெரும்பாலும் பயன்படுகின்றன. 40 சதவிகிதம் மூங்கில்கள் காகிதத் தொழிற்சாலைகளிலும், மரக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம் என அழைக்கப்படுகிறது மூங்கில்.புல் வகையைச் சேர்ந்தது மூங்கில். புல் வகைகளில் அதிக உயரமாக வளர்வது மூங்கில் மட்டுமே. மூங்கிலின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அந்த உயரத்தை சில ஆண்டுகளிலேயே அடைந்துவிடும். இது, மலைவாழ் மக்கள், விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டித் தரும் மரமாகவும் இருக்கிறது

இதனால் மூங்கில் சார்ந்த பல தொழில்கள் உருவாகியுள்ளன. சில பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாகவும் மூங்கில் பயன்படுகிறது. WBC-யின் முக்கிய குறிக்கோள், மூங்கிலை வைத்துப் பல புதுப்பிக்கக்கூடிய பொருள்கள் செய்து, பிளாஸ்டிக் போன்ற மக்கும் தன்மையற்ற பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதுதான்.

மூங்கிலை வைத்து, பல புதுப்பிக்கக்கூடிய பொருள்கள் செய்து, பிளாஸ்டிக் போன்ற மக்கும் தன்மையற்ற பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதுதான் முக்கிய குறிக்கோள்.அழகு சாதன பொருள்கள் தயாரிக்க இதன் திரவம் பயன்படுகிறது. விளையாட்டுப் பொருள்கள், மூங்கில் சைக்கிள், ஹெல்மெட், ஆடைகள் போன்றவை மூங்கிலால் தயாரிக்கப்படுகின்றன.நம் நாட்டில் மூங்கில் பயன்பாடு இன்னும் குறைவாகத்தான் இருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் 'மார்டிரிட்' நகர விமான நிலையத்தில் பயணிகள் பகுதியின் ஒரு பகுதியின் கூரையை மூங்கிலால் செய்துள்ளனர்.

பல நாடுகளில் பள்ளிகள் மூங்கிலால் அமைக்கப்படுகின்றன. உலகளவில் மூங்கில் வீடுகள் பிரபலமாகி வருகின்றன. சமீபத்தில் சில நாடுகள் சாலை அமைக்க மூங்கிலைப் பயன்படுத்துகின்றன. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத சாலைகளாக இவை இருக்கின்றன. இந்தச் சாலைகளில் 16 டன் எடைகொண்ட வாகனம் செல்ல முடியும் எனவும் கண்டுபிடித்துள்ளார்கள்.இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் முதலிடம் பெற்று நிற்பவை. மூங்கிலின் வேர் நிலத்தை ஓர் அடிக்கு மேல் பற்றிக் கொண்டிருக்கும். மூங்கில் ஒன்றோடொன்று இணைந்து வளரும் தொகுப்பு 6 கியூபிக் மீட்டர் வரை இருக்கும்.

பல நாடுகளில் பள்ளிகள் மூங்கிலால் அமைக்கப்படுகின்றன. உலகளவில் மூங்கில் வீடுகள் பிரபலமாகி வருகின்றன. சமீபத்தில் சில நாடுகள் சாலை அமைக்க மூங்கிலைப் பயன்படுத்துகின்றன. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத சாலைகளாக இவை இருக்கின்றன. இந்தச் சாலைகளில் 16 டன் எடைகொண்ட வாகனம் செல்ல முடியும் எனவும் கண்டுபிடித்துள்ளார்கள். சீனாவில் உள்ள மின் சியாங் மூங்கில் பாலம் உலகளவில் நீளமான பாலமாக இருக்கிறது.

மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. உலக அளவில் 10 பில்லியன் டாலர் மூங்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இதில், சீனா சுமார் 50% பங்கைப் பெற்று முன்னணியிலுள்ளது. 2015-ம் ஆண்டு இதன் அளவு 20 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைய உள்ளூர் வர்த்தகம் ரூ.6,505 கோடி. அது 2015-ம் ஆண்டில் ரூ.26,000 கோடியாக வளர வாய்ப்புள்ளதாக இந்திய விவசாயத்துறை அமைச்சகம் கூறுகிறது.வீட்டில் இடம் இருந்தாலும் மூங்கில் வளர்க்கலாம். அதற்காக முள்ளில்லா மூங்கில் ரகங்கள் கிடைக்கின்றன.

கார அமிலத்தன்மை 5.5 லிருந்து 8 வரையுள்ள உள்ள மண் வகைகளில் மூங்கில் வளர்க்கலாம். வடிகால் வசதி உள்ள மண் வகைகளில் மூங்கில் வளர்க்கலாம். வண்டல் மண், படுகை நிலங்கள், சரளைமண், கண்மாய் கரைமண், ஓடை மண், வண்டல் மண் கலந்த களிமண், மணற்பாங்கான நிலங்களில் மூங்கில் வளரும். காற்றோட்டம் இல்லாத நீண்ட நாள் நீர் தேங்கும் பகுதிகளில் மூங்கிலின் வளர்ச்சி பாதிக்கப்படும். மழை அளவு 800 மி.மீ முதல் 2500 மி.மீ வரை, வெப்ப அளவு 80 சென்டிகிரேடு முதல் 450 சென்டிகிரேடு வரை உள்ள பகுதிகள் மூங்கில் சாகுபடிக்கு ஏற்றவை. சூரிய ஒளி அதிகமாகவும் மற்றும் மழை நன்கு பெய்யும் இடங்களில் மூங்கிலின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மழை குறைவாக இருக்கும் பகுதிகளில் நீர் பாசன வசதிகளைச் செய்வதன் மூலம் மூங்கில் வளர்க்கலாம். மூங்கில் மேட்டுப் பகுதிகளிலும், மழைச்சரிவுகளிலும் நன்கு வளரக்கூடியது.

நிலத்தை நன்கு உழுது, பருவ மழைக்கு முன் 1மீ x 1மீ x 1மீ அளவுள்ள குழிகளைத் தோண்டி அதனுள் மக்கியத் தொழு உரம் 10 கிலோ, டி.ஏ.பி. 50 கிராம், பொட்டாஷ் 25 கிராம், பாஸ்போபாக்டீரியா 25 கிராம், வாம் 25 கிராம் ஆகியவற்றை இட்டு கன்றுகளை நட வேண்டும். பிறகு கன்றுகளைச் சுற்றி முதலாண்டில் 1 மீ விட்டத்துக்கும், இரண்டாம் ஆண்டிலிருந்து கன்றுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப 2மீ – 3மீ விட்டத்துக்கும் பாத்திகள் அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.

மூங்கில் குடிசை வீடுகள் கட்டுவதில் மரமாகவும், கட்டிடம் கட்டும் தொழிலிலும், கைவினைப் பொருட்கள் செய்யவும், சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களிலும் மிக முக்கிய பொருளா கவும் பயன்படுத்தப்படுகிறது. ஏறத்தாழ 1500 வகையான பயன்களை மூங்கில் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் பட்டிய லிட்டுள்ளன. இப்படி மூங்கிலின் பயனை சொல்லிக்கொண்டே போகலாம்.

Updated On: 20 Sep 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  3. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  4. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  5. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  6. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  7. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  8. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  9. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  10. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்: