/* */

கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

Today Education News in Tamil -கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

HIGHLIGHTS

கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை  தொடக்கம்
X

Today Education News in Tamil - புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை, அரசினர் தொழில் நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக கந்தர்வக்கோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆ.அசோகராஜன் வெளியிட்ட தகவல்:

தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை TNEA – 2022-2023 இணையதளம் வாயிலாக கட்டணமின்றி விண்ணப்பிப்பதற்கு மாவட்ட சேவை மையமாக (TNEA Facilitation Centre) - ஆக இக்கல்லூரி செயல்படுகிறது. ஆகவே பத்தாம் வகுப்பு, +2 மற்றும் ஐடிஐ முடித்த மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இச்சேவை மையத்தை பயன்படுத்தி தங்களின் விண்ணப்பம் மற்றும் பட்டயச் சேர்க்கை சம்பந்தமான ஆலோசனை மற்றும் பதிவுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்பிற்கான இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் 23.06.2022 மற்றும் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் 08.07.2022 மாலை 5.00 மணி. இணையதள முகவரி: https://www.tnpoly.in ஆகும்.

இக்கல்லூரி வளாகத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவும். கல்லூரி முகவரி 137, அரசினர் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரி, புதுப்பட்டி கிராமம், கந்தர்வக்கோட்டை வட்டம், புதுக்கோட்டை மாவட்டம். வேலை நேரம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jun 2022 9:26 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்