/* */

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசுப் பள்ளியின் பூட்டை உடைத்து 35 லேப்டாப்கள் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசுப்பள்ளியின் பூட்டை உடைத்து 35 லேப்டாப்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசுப் பள்ளியின் பூட்டை உடைத்து 35 லேப்டாப்கள் கொள்ளை
X

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் laptop வைக்கப்பட்டிருந்த அறை.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 35 லேப்டாப் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் அனைத்து அரசு பள்ளிகளும் அரசின் உத்தரவுப்படி பூட்டப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மேல்நிலை கல்விக்கான வகுப்புகள் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் உட்பகுதியில் உள்ள அரசு லேப்டாப் வைத்திருந்த ஆய்வகத்தின் கதவுகள் திறந்து கிடந்தது உள்ளே இதனை பார்த்த ஆசிரியர்கள் ஆய்வகத்தின் உள்ளே சென்று பார்த்த போது மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த 35 அரசு லேப்டாப்புகள் திருடப்பட்டு இருந்ததை அறிந்த பள்ளி தலைமையாசிரியர் மலையப்பன் கொடுத்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் அறந்தாங்கி டிஎஸ்பி ஜெயசீலன், இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், மேற்பார்வையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசுப் பள்ளி பூட்டப்பட்டு இருந்த நிலையில் மர்ம ஆசாமிகள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் இதுகுறித்து நாகுடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Updated On: 24 Jun 2021 9:23 AM GMT

Related News