ஆலங்குடி அருகே அரசு பஸ் மோதி பைக்கில் சென்றவர் பலி

ஆலங்குடி அருகே அரசு பஸ்,மோதிய விபத்தில் பைக்கில் வந்தவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த கிளாங்காடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் கலிம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கிளாங்காடு பகுதியிலிருந்து திருவோணத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது சுக்கிரன் விடுதி பகுதியில் பட்டுக்கோட்டையிலிருது கரம்பக்குடி நோக்கி வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. டூவீலரில் வந்தவர் பலத்த காயங்களுடன் விபத்துக்குள்ளாகினார் . இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அருகே உள்ள திருவோணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவலறிந்த கறம்பக்குடி காவல்துறையினர் விபத்துக்குள்ளான பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 8 May 2021 3:00 PM GMT

Related News