/* */

வேட்டி சேலை உற்பத்தியை விரைவில் துவக்க விசைத்தறியாளர் சங்கம் கோரிக்கை.

Priceless Sarees And Dhotis Login -நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் விதமாக, தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தியை விரைவில் துவக்க வேண்டும் என, விசைத்தறியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

வேட்டி சேலை உற்பத்தியை விரைவில் துவக்க விசைத்தறியாளர் சங்கம் கோரிக்கை.
X

தமிழக அரசு, பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கும்  வேட்டி சேலை

Priceless Sarees And Dhotis Login - தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அதன் மாநில தலைவர் சுரேஷ், மாநில செயலாளர் வேலுசாமி, மாநில பொருளாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர், கைத்தறி மற்றும் துணி நுால் துறை அரசு முதன்மை செயலருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

கைத்தறி மற்றும் துணிநுால் துறை சார்பில், 223விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம், தமிழக அரசின் இலவச பள்ளி சீருடைகள் மற்றும் வேட்டி சேலை உற்பத்தி, 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் செய்யப்படுகிறது. இதன்மூலம், பல லட்சம் நெசவாளர்களும், அவர்களது குடும்பத்தினர் பயனடைகின்றனர். கடந்த ஒரு மாதமாக ஜவுளித்துறையில் நுால் விலை ஏற்றம், இறக்கம் காரணமாக பல ஆயிரம் விசைத்தறிகள் இயங்கவில்லை. வேலைவாய்ப்பின்றி நெசவாளர்கள் சிரமப்படுகின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக, 2021 ஜூன் மாதம் வரை, தமிழக அரசின் வேட்டி சேலலை உற்பத்தி செய்ய அரசு வாய்ப்பளித்தது; அதே போல் இம்முறையும் அதே தரம், வடிவம், ரகம் மாறாமல் வேட்டி சேலை உற்பத்தியை துவங்க, அரசு ஆர்டர் தந்து, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.கடந்தமுறை ஆகஸ்ட் மாதம் வேட்டி தயாரிப்பும், நவம்பர் மாதம் சேலை தயாரிப்பும் துவங்கியதால், உற்பத்தியில் தொய்வும்,பல்வேறு சிரமங்களும் ஏற்பட்டது.

எனவே, இம்முறை நடப்பாண்டில் விரைவில் வேட்டி சேலை உற்பத்தியை துவங்க, ஆர்டர்கள் வழங்கி உத்தரவிட வேண்டும் என, கூறியுள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 6:56 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!