/* */

தை பிறந்தால் வழி பிறக்கும்... பொங்கலோ ....பொங்கல்..... படிங்க...

pongal quotes in tamil தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது பொங்கல் பண்டிகை. 4 நாட்கள்இது கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

HIGHLIGHTS

தை பிறந்தால் வழி பிறக்கும்...  பொங்கலோ ....பொங்கல்..... படிங்க...
X

பொங்கல் பண்டிகையன்று  பயன்படும் மஞ்சள் கொத்து விற்பனை (கோப்பு படம்)

pongal quotes in tamil

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான மார்கழி மாதத்தில் தமிழக கோயில்கள் அனைத்திலும் அதிகாலையி்லேயே சிறப்பு பூஜைகள் நடக்கும். மார்கழிப் பெருவிழா என மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடுவர். மார்கழி மாதத்தில் அதிகாலையில் நடுங்கும் குளிரிலும் இறைபக்தியோடு பஜனைக்குழுவினர் பக்திப்பாடல்களைப் பாடி உலா வருவது வழக்கம். இதனால் மார்கழி மாதத்தினை ஆன்மீக மாதம் என்று சொல்லப்படுவதும் உண்டு. அந்த வகையில் மார்கழி முடிந்ததும் தை மாதம் பிறந்து புது உற்சாசகத்தினைக் கொடுக்கிறது.

''தை பிறந்தால் வழி பிறக்கும்...'' என்பது கருத்து மிகுந்த சொற்றொடர்... தமிழர்களின் விவசாய பணிகளில் ஆடிமாதத்தில்விதைத்த விதைகள் பயிராகி அறுவடைக்கு தயாராக நிற்கும். இந்த பயிர்களை அறுவடை செய்த பின்னர் சங்க காலம் முதல்இக்காலம் வரை தொடர்ந்த தை மாதத்தில்கொண்டாடப்படும் திருவிழாதான் பொங்கல் திருவிழா ஆகும்.

pongal quotes in tamil


பொங்கல் பண்டிகையானது தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது (கோப்பு படம்)

pongal quotes in tamil

பொங்கல்விழா என்பது தமிழர்களால் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான அறுவடைப்பண்டிகையாக இன்றளவில் திகழ்ந்து வருகிறது.தென்இந்தியா, இலங்கை , மலேசியா, சிங்கப்பூர் , ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா, மொரீசியஸ் என தமிழர்கள் வாழும் அனைத்துநாடுகளிலும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.விவசாய உழவு பணிகளை மேற்கொள்ளும் மக்கள் இயற்கை தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்து கடவுளான சூர்ய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.

பொங்கள் நாளன்று புது அரிசியில் பொங்கல் பொங்கி, மஞ்சள்தோரணங்கள் கட்டி, கொண்டாடப்படும் விழாதான் பொங்கல்.ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வார்கள். அதுபோல் ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவம்தான் தை மாதம். புதிய அடுப்பில் அறுவடை செய்த புது நெல்லின் புத்தரிசியில் சர்க்கரை, பால், நெய், சேர்த்து கொதிக்க வைத்து பொங்கலாக்கி அதனை சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாதான் பொங்கல் ஆகும்.

pongal quotes in tamil


பொங்கல் பண்டிகை தினத்தில் சூரிய கடவுளுக்கும் பொங்கல் வைப்பர் (கோப்பு படம்)

pongal quotes in tamil

இயல்பாகவே தண்ணீர் வசதி அதிகம் உள்ள இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும்.ஆனால் தண்ணீர் வசதியில்லாத இடங்களில் நீர்தேக்கத்தை நம்பி ஒரு வேளாண்மைதான் விளைவிக்க முடியும். எனவே மார்கழி அல்லது தை மாத அறுவடையே நாடு முழுவதும் நிகழும்.இந்த சிறப்பு பூஜையில் அறுவடை முடிந்த பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், கொடிவழிக்காய்கறிகளான அவரை,புடலை, கத்தரி, வாழை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு, போன்றவையே நைவேத்யமாக வைக்கப்படுவது வழக்கம்.

பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். . இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள இயலும்.

பொங்கல் விழா,உழவுப்பணி மேற்கொள்ளும் மக்கள் மற்றும் நகர்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் என அனைத்து தரப்பினரும் கொண்டாடப்படும் பண்டிகையாக திகழ்கிறது. தமிழக மக்களைப் பொறுத்தவரை அக்காலம் முதல் இக்காலம் வரை விவசாய பணிகள் என்றால் சோர்வடைய மாட்டார்கள். உழைப்பையே தாரக மந்திரமாக கொண்டவர்கள்.

pongal quotes in tamil


தமிழக பெண்கள் போகியில் துவங்கி தொடர்ந்து 4 நாட்கள் வாசலில் வண்ணக்கோலமிட்டு மகிழ்வர்.(கோப்பு படம்)

pongal quotes in tamil

தன்னுடன் தினந்தோறும் உழைக்கும் கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும் இனிது படைக்கும்விழாவாக இப்பொங்கல் பண்டிகையானது தை மாதப்பிறப்பன்று கொண்டாடப்படுகிறது. ஆடிமாதத்தில் விதைத்த விதைகள் அனைத்தும் பயிராகி விளைச்சல் கண்டு அதனை மார்கழியில் அறுவடை செய்து வீட்டிற்கு கொண்டு வந்து தன் உழைப்பின் பயனை நுகர தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.

பொங்கல் பண்டிகை வருகிறது என்றால் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே இதற்கான துாய்மைப் பணிகள் துவங்கிவிடும். அனைத்து பொருட்களும் கடைகளில் பர்ச்சேஸ் செய்துவிடுவர். அதாவது மாடுகளின்கொம்புகளுக்கான பெயிண்ட் முதல் கலர் காகிதம், தோரணம் முழுக்க கட்ட.புதுமூக்கணாங்கயிறு, என எல்லாமே புதுசாதான். கோலப்பொடி அதாவது கலர் கோலப்பொடி தினந்தோறும் கலர்கோலம்வாசலில் பெண்கள் போட வாங்கிவிடுவர். பொங்கலிட புதுப்பானையும் முன்னதாகவே வாங்கி வந்துவிடுவர்.

pongal quotes in tamil


பொங்கல் பண்டிகையானது கிராமப்புறங்களில் உற்சாகமாக விழா போல் கொண்டாடுவர் (கோப்பு படம்)

pongal quotes in tamil

பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே தொடர்ந்து போகியில் துவங்கி,காணும் பொங்கல்வரை களை கட்டும் . இப்பொங்கல் பண்டிகைக்கு முன்பெல்லாம் அக்காலத்தில் வாழ்த்து அட்டைகளை தபால்மூலம் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அனுப்பிவைப்பர். இது அக்காலத்திய ட்ரென்ட். ஆனால் தற்போதோ சோஷியல் மீடியாக்களின் மூலம் வாழ்த்துகள் பரிமாறிக்கொள்ளப்படுவதால்வாழ்த்து அட்டைகளுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணை

"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகை

""தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறு

"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறு

"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகை

பொங்கல் வாழ்த்துகள்...இதோ... முதல்ல படிங்க...

pongal quotes in tamil


பொங்கல் என்றாலே தமிழகத்தில் ஜல்லிக்கட்டுதான்... சீறிக்கிளம்பி வரும் காளையை அடக்கும் வீரர்கள் (கோப்பு படம்)

pongal quotes in tamil

புத்தாடை உடுத்தி... சூரிய பகவானை போற்றும்விழா குடும்பத்துடன்... பொங்கலோ... பொங்கல்...

இயற்கைக்கும்...இறைவனுக்கும் அமுது படைக்கும்தைத்திருநாள்விழா...பொங்கல்... பொங்கலோ பொங்கல்...

உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் பொதுவிருந்துபரிசு வழங்கி பாராட்டும் விழா... தைத்திருநாள் விழா

வாழ்நாள் முழுதும் நம் வயிராற சாப்பிட வழி வகுக்கும்இயற்கை நிலத்தில் தோரணம் கட்டி...பொங்கலிட்டு...

சூர்ய கடவுளை வணங்கி.,.. அமுது படைக்கும் விழா...

காவிரியாற்றங்கரையில் உள்ள நிலங்கள் அனைத்தும் ஆடியில்விதைத்த விதைகள் அற்புதமாக பயிராகி.. மார்கழியில் அறுவடை செய்து... முடிந்தவுடன்.. தமிழர்கள் அனவைரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும்அறுவடைத்திருவிழா... பொங்கலோ ...பொங்கல்...

pongal quotes in tamil


மாட்டுப்பொங்கலன்று மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசுவர் (கோப்பு படம்)

சோழ நாடு சோறுடைத்து என்றுசொல்லும் தஞ்சை தரணியில் இது உற்சாகத்திருவிழா... விவசாயிகளுக்கு...

அன்பும், ஆசைகளும், உங்கள் வளர்ச்சிக்கு பொங்கட்டும்... மகிழ்ச்சி நிலவட்டும்...இத்திருநாளில் வாழ்த்துகள்...

தரணியிலுள்ள அனைவருக்கும் நல்லஆரோக்யத்தையும், உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும்... தைமகள் அள்ளி தரட்டும்.. பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்...

ஒளிமயமான எதிர்காலத்தினை பெற்றிட உவகையோடு ஒன்றுசேர்ந்து ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்..தைப்பொங்கல் திருவிழா....

ஆண்டுதோறும் இயற்கை நிலங்களில் உழைக்கும் உழவர்களின் களைப்பை போக்கும் அற்புத திருவிழா...

அறுவடைத்திருநாளான தைப்பொங்கல் தினத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்கல் போல் பொங்கட்டும்..

தைத்திங்கள் பெருவிழா... தரணி முழுக்க உற்சாக விழா..தரணி வாழ் தமிழர்களின் வீடுகளில் பொங்கும் நாள்...இது..

pongal quotes in tamil


பொங்கலன்று தமிழகம் முழுவதுமே கரும்பு விற்பனையானது களை கட்டும் (கோப்பு படம்)

pongal quotes in tamil

தை மகளே வருக... வருக... தரணியெல்லாம் சிறப்பு தருக..

தை பிறந்தால் வழி பிறக்கும்... கவலைகள் நீங்கட்டும்

வளர்ச்சி பொங்கட்டும்...இத்திருநாளில்...பொங்கலோ பொங்கல்...

உழவுப் பணி மேற்கொள்ளும் விவசாயிகளின் திருவிழா

வீடு முழுக்க உற்சாகம்... விருந்தினர்கள் உபசரிப்பு... வாழ்த்துகள்... வாழ்த்துகள்...

4 நாட்கள் களை கட்டும் தமிழர் திருவிழா... உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் தலையாய திருவிழா...இது..

pongal quotes in tamil


மாடுகளைக் குளிப்பாட்டி சந்தன குங்குமம் இடட்டு புது கயிறு, புது மணி, உள்ளிட்டவைகளோடு பலுான்கள் கொம்பில் கட்டி அழகு பார்க்கப்படும் நாள் மாட்டுப்பொங்கல் (கோப்பு படம்)

pongal quotes in tamil

போகியன்று பழையன கழிதலும், தைப்பொங்கலிட்டு

உறவுகளோடு கூடி உறவாடி மகிழும் தைப்பெருவிழா

உறவுகளை அழைத்து கொண்டாடும் உன்னத திருவிழா தைப்பொங்கல்...பொங்கலோ... பொங்கல்....

கால்நடைகளுக்கு... ஓய்வு கொடுக்கும் திருவிழா...ஒரு நாள் மட்டும்...உற்சாகம்.. கொண்டாட்டம்

மாட்டுப்பொங்கல்....கொம்புகளை சீவி, வர்ணமிட்டு வாஞ்சையுடன் குளிப்பாட்டி குங்குமம் மஞ்சளிட்டு வணங்கும் திருவிழா...

செங்கரும்பினை இருபுறமும் சார்த்தி, புத்தடுப்பில்அறுவடை அரிசியான புத்தரிசியிட்டு பொங்கலிடும் விழா...

Updated On: 1 Jan 2023 8:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்