/* */

நாளை காவல்துறை மானியக் கோரிக்கை: என்ன சொல்லப்போகிறார் முதல்வர்?

திண்டுக்கல்லில் டி.ஜி.பி., தலைமையில் நடந்த குறைகேட்பு நாள் கூட்டத்தில் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை.

HIGHLIGHTS

நாளை காவல்துறை மானியக் கோரிக்கை:  என்ன சொல்லப்போகிறார் முதல்வர்?
X

திண்டுக்கல் வந்த டி.ஜி.பி., சைலேந்திரபாபு, அங்கு மரக்கன்று நட்டார்.

தமிழக காவல்துறை சந்தித்து வரும் நெருக்கடிகளை பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும். சினிமாவில் காட்டுவது போல் காவல் துறைக்கு எந்த வசதிகளும் கிடையாது. எந்த அதிகாரமும் கிடையாது. மாறாக காவல்துறையினர் அரசியல்வாதிகளுக்கு கட்டுப்பட்டே செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றதும், தி.மு.க.,வினர் காவல்துறை நிர்வாகத்தில் எந்த தலையீடும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவித்தார். அதேபோல் காவலர்களின் குறைகளை தீர்க்க ஆண்டு தோறும் குறைகேட்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

முதல் ஆண்டு குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. விண்ணப்பித்த காவலர்கள் பலருக்கு தீர்வும் கிடைத்தது. அதன் பின்னர் அந்த திட்டம் கை விடப்பட்டதோ என சந்தேதிக்கும் அளவு நிலைமை மாறி விட்டது. காவலர்களாலும்ம், கீழ்நிலை காவல்துறை அதிகாரிகளாலும் தங்களது உயர் அதிகாரிகளை சந்தித்து எந்த கோரிக்கையும் வைக்க முடியவில்லை. தங்களது பிரச்னைகளை சொல்ல முடியவில்லை. பணிச்சுமை, வசதியின்மை போன்ற சிக்கல்களில் சிக்கி காவலர்கள் பரிதவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை குறைகேட்கும் நாள் கூட்டங்கள் நடத்தவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் திண்டுக்கல் வந்த டி.ஜி.பி., சைலேந்திரபாபு அங்கு திடீர் என குறைகேட்பு கூட்டம் நடத்தினார். இதில் திண்டுக்கல் டி.ஐ.ஜி., திண்டுக்கல் தேனி எஸ்.பி.,க்கள் கலந்து கொண்டனர். நுாற்றுக்கணக்கான காவலர்கள் மனு கொடுத்தனர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் ஒரு மனுமீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது காவலர்கள் மத்தியில் பெரிய மனக்குறையாகவே உள்ளது. டி.ஜி.பி.,யிடம் கொடுத்த மனுவே கிடப்பில் போடப்பட்ட பின்னர் தங்களுக்கு வேறு புகலிடமே இல்லையே என புலம்புகின்றனர்.

இந்நிலையில் சட்டசபையில் நாளை ஏப்., 20ம் தேதியும், நாளை மறுநாள் 21ம் தேதியும் காவல்துறை மானியக்கோரிக்கைக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். இதில் காவல்துறையினர் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வுகளை முதல்வர் அறிவிப்பார். குறிப்பாக பெண் போலீசார் படும் சிக்கல்களுக்கு பெரும் தீர்வு கொடுப்பார். காவல்துறைக்கு தேவையான பல்வேறு வசதிகளை செய்து கொடுப்பார் என நம்புகின்றனர்.

தமிழக முதல்வரின் பதிலுக்காக தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் காவல்துறையினர் சட்டசபையை நோக்கி கண் மூடாமல் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டுள்ளனர்.

Updated On: 19 April 2023 3:38 AM GMT

Related News