/* */

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்டணுமா? வாங்க தெரிஞ்சிக்குவோம்..!

PMAY Scheme Details in Tamil-பிரதம மந்திரியின் வீடு காட்டும் திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? திட்டம் நடைமுறையில் உள்ளதா? வாங்க பார்க்கலாம்.

HIGHLIGHTS

PMAY Scheme Details in Tamil
X

PMAY Scheme Details in Tamil

PMAY -பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம் நடைமுறையில் உள்ளதா?

PMAY Scheme Details in Tamil-நகர்புறத்திற்கான அனைவருக்கும் வீடு கட்டும் திட்டமான பிஎம்ஏஒய் – நகர்புறத் திட்டத்தை மத்திய அரசு 2022 செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதன்மூலம், இந்த திட்டத்தின்படி மானியக் கடன் திட்டத்தின் கீழ் பயனாளர்கள் செப்டம்பர் 30, 2022 வரை பெற முடியும். இந்த திட்டம் மேலும் 2024 வரையில் நீட்டக்கப்படலாம் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிராமங்களுக்கான பிஎம்ஏஒய் திட்டத்தை அதன் இலக்கான 2.95 கோடி வீடுகள் கட்டித் தருவதை உறுதி செய்வதற்காக, இந்த திட்டத்தின் கால அளவை 2024ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை மத்திய அமைச்சரவை நீட்டித்தது. முன்னதாக, பிஎம்ஏஓய் திட்டத்தின் காலக்கெடு என்பது மார்ச் 31, 2022 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பிஎம்ஏஓய் திட்டத்தின்படி மானியக் கடன் பெறுவதற்கான கடைசி தேதியும் மார்ச் 31, 2022 ஆக இருந்தது. தற்போது இந்த திட்டத்திற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டிருந்தாலும், அடக்கவிலையில் வீடுகளை பெறுவதற்கான பிரிவு 88இஇஏ-ன் கீழ் வழங்கப்படும் சலுகைகள் மார்ச்31, 2022-ல் முடிவடைந்துவிட்டது. ஏனென்றால், கடந்த 2022-23 பட்ஜெட்டில் இத்திட்டம் குறித்து எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.

PMAY என்றால் என்ன?

இந்தியாவில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்ட வாய்ப்புகள் வழங்கி நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் அனைவருக்கும் குடியிருக்க வீடு என்ற இலக்குடன் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 1ல் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் (Pradhan Mantri Awas Yojana)தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பிஎம்ஓய்ஏ – நகர்புறம், பிஎம்ஓய்ஏ – கிராமப்புறம் என்ற இரண்டு பிரிவுகளாக செயல்படுத்தப்படுகிறது.

PMAY திட்டத்தின் கீழ் யார் யார் பயன்பெற முடியும்?

ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி அல்லது திருமணமாகாத பிள்ளைகள் ஆகியோர் ஒரு குடும்பம் என பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம் வரையறுக்கிறது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோருக்கு, அவருடைய பெயரிலேயோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயரிலேயோ இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சொந்தமாக வீடு இருக்கக் கூடாது.

21 சதுர அடிக்கும் குறைவான வீடு உள்ளவர்கள், ஏற்கெனவே உள்ள வீட்டை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் பயன்பெறலாம். குடும்பத்தில் உள்ள சம்பாதிக்கும் வயது வந்தவர்கள் தனிக் குடும்பமாக கருதப்படுவர். அதனால் அவர்களின் திருமண நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்களும் இந்த திட்டத்தின் பயனாளிகளாக கருதப்படுவார்கள்.

திருமணமான தம்பதியரில் ஒருவரோ அல்லது இருவரும் இணைந்தோ, இந்த திட்டத்திற்கான வருமான உச்சவரம்பு தகுதி இருக்கும் பட்சத்தில் ஒரு தனி வீடு பெற தகுதி உடையவர் ஆவர். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், இந்த திட்டத்தின் 4 பிரிவுகளின் கீழும் பயன்பெற முடியும். குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் உள்ள குடும்பத்தினர் மானியக் கடன் திட்டத்தில் மட்டுமே பயனடைய தகுதி உடையவர்கள்.

பட்டியலின (SC) மற்றும் பழங்குடியினம் (SD) வகுப்பைச் சேர்ந்தவர்கள், பொருளாதாரத்தில் நலிந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் பெண்களும் பிரதம் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதி உடையவர்களே.

தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ரூ.2.67லட்சம் வரை வட்டி மானியம் வழங்கப்படும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 25 March 2024 9:52 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  6. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  7. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  8. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  9. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்