/* */

மே 8ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், வரும் மே, 8ம் தேதி காலை, 9.30 மணிக்கு வெளியாகும் என, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

மே 8ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
X

 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் (கோப்பு படம்)

Plus 2 result on May 8; School Education Department Notification- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை, 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 79 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. இப்பணியில் ஏறத்தாழ 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஈடுபட்டனர்.

விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்தது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.

இந்நிலையில், மே 7 ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதால், மே 5 ஆம் தேதி முடிவு வெளியிடப்பட்டால் மாணவர்களின் கவனம் சிதற அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பதால், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே, தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் பொதுத்தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று ஆவலாக காத்திருந்த நிலையில், தற்பொழுது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, மே 8 ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் வெளியிட்டுள்ளார். வரும் மே 8ம் தேதி அன்று காலை, சரியாக 9.30 மணிக்கு தெரிந்துகொள்ளலாம். மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர், tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in/-ல் பொதுத்தேர்வு முடிவுகளை .உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

மாணவ, மாணவியரின் பள்ளி வாழ்க்கை, இறுதியாக பிளஸ் 2 பொதுத்தேர்வுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து கல்லூரியில் பட்டப் படிப்பு என்ற அடுத்த கட்டத்தை நோக்கி அவர்கள் நகர்கின்றனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், டாக்டர், இன்ஜினியர், அரசுத்துறை பணி வாய்ப்புகள் போன்ற கனவுகளை கண்களில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் இருக்கின்றனர். அவர்களது நனவாக்கும் விதமாக, அதிக மதிப்பெண் பெற்று, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, இந்த கனவுகள் எளிதில் சாத்தியமாகும். அந்த வகையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவை, தேர்வு எழுதிய மாணவ, மாணவியரும், அவர்களது பெற்றோரும் வெகு ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். வரும் மே 8ம் தேதிக்காக, மிகுந்த ஆவலாக தேர்வு முடிவு வெளியாகும் அந்த நாளை எதிர்பார்த்துள்ளனர்.

Updated On: 28 April 2023 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு