Begin typing your search above and press return to search.
பிபின் ராவத் படம் வரைந்து காதுகேளாத பள்ளி மாணவர்கள் அஞ்சலி
பெரம்பலூரில், காதுகேளாத பள்ளி மாணவர்கள் பிபின் ராவத் படத்தை வரைந்து, அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
HIGHLIGHTS

பெரம்பலூரில் காதுகேளாத பள்ளி மாணவர்கள், முப்படை தளபதியின் படத்தை ஓவியமாக வரைந்து அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
முப்படைகளின் தளபதி பிபின்ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்ட்டர் விபத்தில் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி விட்டது. வீர மரணம் அடைந்தவர்களுக்கு, நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், பெரம்பலூரில் உள்ள காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். பிபின்ராவத் உருவப்படத்தை ஓவியமாக வரைந்த அந்த மாணவர்கள், பின்னர் அப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.