/* */

பெரம்பலூர் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 2 பேர் பலி

பெரம்பலூர் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 2 பேர் பலி
X

விபத்தில் சிக்கிய கார் தீப்பற்றி எரிந்தது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் குமார்(48) .இவர் தனது மகள் தன்யஸ்ரீ (14) மற்றும் சகோதரர் வெங்கட வரதன் இவர்களுடன் திருச்சி மாவட்டம் குளத்தூரில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு பொங்கல் கொண்டாடுவதற்காக ஒரு வாடகை காரில் புறப்பட்டு வந்துள்ளார். இவர்களது கார் இன்று அதிகாலை சென்னை -திருச்சி தேசிய நெஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அருகில் சென்ற போது முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த குமார் மற்றும் வெங்கட வரதன் இருவரும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்தின்போது கார் முற்றிலும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார் ஓட்டுநர் விஸ்வநாதன் மற்றும் குமாரின் மகள் தன்யஸ்ரீ இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினருடன் வந்த போலீஸார் காயமுற்ற இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக.பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்னை - திருச்சி மார்க்கத்தில் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 13 Jan 2022 4:28 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?