/* */

மாநில அளவிலான தடகள போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட வீராங்கனைகள் சாதனை

சென்னையில் மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்ட வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.

HIGHLIGHTS

மாநில அளவிலான தடகள போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட வீராங்கனைகள் சாதனை
X
மாநில அளவிலாதன தடகள போட்டியில் சாதனை படைத்த பெரம்பலூர் மாணவிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் சென்னையில் கடந்த 15 - ந்தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றது . இந்த தடகள போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகளை சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள் .

இதில் பெரம்பலூர் மாவட்ட பள்ளி விளையாட்டு விடுதி வீராங்கனையும் , பெரம்பலூர் அரசு உதவி பெறும் பள்ளியின் பிளஸ் -2 மாணவியுமான தன்யா 100 மீட்டர் தடை தாண்டுதல் , 200 மீட்டர் ஓட்டம் , 800 மீட்டர் ஓட்டம் , நீளம் தாண்டுதல் , உயரம் தாண்டுதல் , குண்டு எறிதல் , ஈட்டி எறிதல் ஆகிய 7 போட்டி களை கொண்ட ஹெப்டத்லான் போட்டியில் 2 - ம் இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.


மேலும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி கிருத்திகா 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3 - ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார் . மாநில அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து சாதனை படைத்த தன்யா , மற்றும் கிருத்திகா ஆகியோரை பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர் .

Updated On: 19 Oct 2021 2:31 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  2. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  3. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  5. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  6. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  8. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  9. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?