Begin typing your search above and press return to search.
ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வினியோகம்
பெரம்பலூரில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வினியோகம் செய்யப்பட்டது.
HIGHLIGHTS

பெரம்பலூரில் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டம் அரனாரை கிராமத்தில் 17வது வார்டு கவுன்சிலர் துரை காமராஜ் தலைமையில் கொடி ஏற்றி இனிப்புகள், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் உணவு வழங்கி தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து மாணவர்களோடு கொண்டாடினர்.
நிகழ்வில் நகர்மன்ற சேர்மன் அம்பிகா ராஜேந்திரன் ,ஊட்டி முத்துக்குமார், ரினோ பாஸ்டின் ,மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடபட்டன.