/* */

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடி முற்றுகை

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் நேற்று திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை கனரக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

HIGHLIGHTS

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடி முற்றுகை
X

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடி

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் நேற்று திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை கனரக வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2018 ஆம் ஆண்டு பெரம்பலூரில் இருந்து அரியலூர், தஞ்சாவூர் வழியாக மானாமதுரை வரை செல்லும் சாலை (NH-136) தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தஞ்சாவூர் வரை 67 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து முடிந்த இந்த சாலையில் பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென சுங்கச்சாவடி நேற்று திறக்கப்பட்ட நிலையில், ஒரு முறை கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும், பலமுறை சென்று வரும் தங்களுக்கு இதனால் பெருமளவில் நஷ்டம் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்து கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தியும், சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்கச்சாவடியில் இரண்டு புறமும், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததோடு, ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி., மணி, மருவத்தூர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் உள்ளிட்ட பொது மக்களிடம் இன்று ஒரு நாள் கட்டணமின்றி அனைத்து வாகனங்களும் சென்று வர அனுமதி வழங்குவதாகவும், பின்னர் சுங்கச்சாவடி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என சமாதானம் செய்து, போராட்டத்தை கைவிடச் செய்தனர். இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் சுமார், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 25 July 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?