/* */

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடியினர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
X

பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த ஆனந்தன்-ரம்யா ஜோடி.

பெரம்பலூர் மாவட்டம் மரம் வளர்ப்போம் கிராமத்தில் வசிக்கும் கண்ணன் மகன் ஆனந்தன் (வயது23) எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வரும் இவர் சென்னை வேளச்சேரி பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார், இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மகள் ரம்யாவுக்கும் (வயது 20), ஆனந்துக்கும் பழக்கம் ஏற்பட்டது.

6 வருட காதலை தொடர்ந்து கடந்த நவம்பர் 25 ஆம் தேதி. பெரம்பலூர் சர்க்கரை ஆலை பகுதியிலுள்ள, முத்து மாரியம்மன் கோவிலில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர், ஆனந்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திருமணத்தை ஏற்றுக்கொண்டு, இருந்துவந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள தனது மகள் ரம்யாவைகடத்திச் சென்றுள்ளதாக அவரது பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் அறிந்து ஆனந்தன் உறவினர்களுடன் திருமணம் செய்துகொண்ட ரம்யாவை அழைத்துக் கொண்டு இவர்களது வயது மற்றும் பள்ளிகல்வி சான்றிதழுடன் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நவம்பர் இன்று, தஞ்சம் புகுந்தார். மேலும் தாங்கள் விரும்பி திருமணம் செய்து கொண்டதாகவும் ரம்யாவின் தகப்பனார் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என குறிப்பிடப்பட்டு ரம்யா கையெழுத்திட்டு எழுதிய மனுவை போலீசாரிடம் வழங்கினார்கள்.

Updated On: 29 Nov 2021 3:17 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை