/* */

பெரம்பலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

பெரம்பலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையையொட்டி 30ம் தேதி கவுன்சிலிங் நடக்கிறது,

HIGHLIGHTS

பெரம்பலூர் அரசு  பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
X

பெரம்பலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்தது.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டு பட்டய சேர்க்கைக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது. தற்போது மீதமுள்ள நிரப்பப்படாத 150 காலி இடத்தை நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக்கல்வி இயக்கத்திலிருந்து அனுமதி கிடைக்கப்பெற்றமையை தொடர்ந்து கலந்தாய்வு இக்கல்லூரியில் 30.09.2021 அன்று நடைபெற உள்ளது. எனவே முதல் கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத மாணவ-மாணவியர்கள் மற்றும் பட்டய சேர்க்கைக்கு சேர விருப்பமுள்ள மற்றும் விண்ணப்பிக்காத மாணவ-மாணவியர்கள் அனைவரும் நேரடியாக கல்லூரியில் சேர்க்கையினை பெறலாம்.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வி கட்டணம் ரூ.2,194 ஆகும். தரமான கல்வி மற்றும் அனுபவமிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் ஸ்மார்ட் கிளாஸ் வசதி மற்றும் நல்ல கட்டமைப்புடன் கூடிய ஆய்வக வசதி உள்ளது. கடந்த 2020-21 ஆம் கல்வி ஆண்டில் கல்லூரி வளாகம் மூலமாக சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிக்கு அருகாமையில் மாணவியர்கள் தங்கிப் பயில இலவச அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி உள்ளது. மாணவர்கள் தங்கி பயில கல்லூரி வளாகத்தினுள் குறைந்த கட்டணத்தில் தனி விடுதி செயல்பட்டு வருகிறது.

இலவச பேருந்து பயண அட்டை, அரசு கல்வி உதவித்தொகை மற்றும் இலவச மடிக்கணினி ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் ஏதேனும் விபரங்களுக்கு 04328- 243 200 என்ற தொலைபேசி எண்ணிலும், 99624 88005 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 20 Sep 2021 2:02 PM GMT

Related News