பெரம்பலூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே 2 வயது மதிக்கத்தக்க புள்ளி மான் தண்ணீர் தேடி வந்த இடத்தில் நாய் கடித்து இறந்தது.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரம்பலூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் உயிரிழப்பு
X

பெரம்பலூர் அருகே பாலாம் பாடி கிராமத்தில் இறந்து கிடந்த புள்ளி மான்

பெரம்பலூர் மாவட்டத்தில் வெண்பாவூர், முருக்கன்குடி, அன்னமங்கலம், கீழக் கணவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன.

இந்த வனப்பகுதியில் மான், மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் அதிகளவு வாழ்கின்றன.அவ்வப்போது மான் உள்ளிட்ட வன உயிரினங்கள் தண்ணீர் தேடி மக்கள் இருப்பிடத்திற்கு வருவதுண்டு. அப்படி வரும்போது சாலையினை கடக்கிற நேரத்தில் வாகனத்தில் அடிபட்டு இறப்பதும், நாய்கள் கடித்து இறப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் அருகே பாலம்பாடி கிராமத்தில் தண்ணீர் தேடி வழி தவறி வந்த 2 வயது மதிக்கதக்க பெண் புள்ளி மானை நாய்கள் கடித்து குதறியதில் இறந்து கிடந்தது.இதுபற்றி அங்குள்ளவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் உயிரற்ற மானின் உடலை மீட்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புள்ளி மானின் இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Sep 2021 8:07 AM GMT

Related News