/* */

பெரம்பலூரில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சி

பெரம்பலூரில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் திருநங்கைகளுக்கு  கொரோனா நிவாரணமாக ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சி
X

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம் இரண்டாயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் , எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் நிவாரண நிதி வழங்கினர்.

தமிழக முதல்வர் உத்தரவின் படி குடும்ப அட்டை பெறாத வாரியத்தின் மூலம் பதிவு செய்துள்ள திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கிடவும் அதன் அடிப்படையில் முதல் தவணையாக ரூ.2000 வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து பெரம்பலூரில் வாரியத்தின் மூலம் பதிவு செய்துள்ள 51 மூன்றாம் பாலினத்தவர்களை கண்டறிந்து தலா ரூ.2000 வீதம் ரூ.1.02 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவித் தொகையை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முத்துச்செல்வி மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 11 Jun 2021 10:45 AM GMT

Related News