/* */

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை
X

பெரம்பலூர் ஐ.டி.ஐ.யில் மாணவர்கள் பயிலும் காட்சி (கோப்பு படம்).

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை இணையவழியில் நடைபெற்றது. எனினும் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகிய இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளன.

எனவே 08.10.2021 முதல் 30.10.2021 வரை இந்த இரண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை (பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர்) நேரடியாக அணுகி காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், பெரம்பலூர் 04328-296644 என்ற தொலைபேசி எண்ணிலும், 9499055882 என்ற அலைபேசி எண்ணிலும், முதல்வர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆலத்தூரில் 9499055853 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 13 Oct 2021 4:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...