/* */

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா நேரில் ஆய்வு.

HIGHLIGHTS

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கடபிரியா நேரில் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கடபிரியா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் ஒருங்கிணைந்த பள்ளி கட்டிடங்கள் மேம்படுத்தும் திட்டம், தேசிய கிராம சுய வேலைவாய்ப்பு திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டு திட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம், நபார்டு திட்டத்தின் கீழ் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம், மூலதன நிதி திட்டம், பசுமை வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நுண்ணுயிர் உரமாக்கும் மையம், மாநில நிதிக்குழு மானியத்தின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், ஆய்வின்போது ஊராட்சி தணிக்கை கோப்புகள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட பணிகள் தொடர்பான பதிவேடுகள், பசுமை வீடுகள் திட்டம் தொடர்பான பதிவேடுகள் பொது நிதி வளர்ச்சி பணிகள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் பல்வேறு அலுவலக கோப்புகளை பார்வையிட்டார்கள்.

முன்னதாக வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மரக்கன்று நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை ஒன்றிய குழுத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பணிகள்) நாராயணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளிதரன், ராஜேந்திரன், உதவி பொறியாளர் ஆனந்த், ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 15 Sep 2021 2:57 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  3. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  6. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  7. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  8. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  10. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி