/* */

நீலகிரி எம்.பி., ஆ.இராசா மனைவி படத்திறப்பு நிகழ்ச்சி : அமைச்சர்கள் பங்கேற்பு

நீலகிரி எம்.பி., ஆ.இராசா மனைவி பரமேஸ்வரி படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

நீலகிரி எம்.பி., ஆ.இராசா மனைவி படத்திறப்பு நிகழ்ச்சி : அமைச்சர்கள் பங்கேற்பு
X

நீலகிரி எம்.பி.ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் பட திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள் மற்றும் கட்சியினர்.

கடந்த மே.29 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்த திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பியின் மனைவி பரமேஸ்வரி பட திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.

திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்ற மாதம் 29 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த கிராமமான வேலூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பரமேஸ்வரி பட திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு, பரமேஸ்வரியின் உருவ படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் போது தமிழக வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வெ.கணேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறையினர் கலந்து கொண்டு மறைந்த பரமேஸ்வரியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 13 Jun 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!