/* */

பெரம்பலூரில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

பெரம்பலூரில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்
X

பெரம்பலூரில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயற்சி முகாம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கூட்டரங்கில் நடைபெற்றுது.

இதில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, அரங்குகளில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை வளர்வதற்கு தேவையான தானியங்கள் ஊட்டச்சத்து உணவு பற்றிய கண்காட்சியினை பார்வையிட்டார். நான் ஆசைப்படுகிறேன் ஆனால் அவரசப்படல் என்ற குழந்தைகள் திருமணங்களை தடுக்க குரும்படம் நிகழ்வை துவக்கிவைத்தார். குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தவேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்கவேண்டும். அதே போல் குழந்தைகளுக்கு 181 புகார் எண்களை பற்றி அனைவரும் விழிப்புணர்வு செய்யவேண்டும்.181 பணியாற்றும் அலுவலர்களுக்கு பணிசெய்ய விடாமல் அரசியல் வாதிகள் மற்றும் யாரேனும் தொந்தரவு செய்தால் உடனே பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தாருங்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதில் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணை தலைவர் து.ஹரிபாஸ்கர், ஒன்றிய பெருந்தலைவர்கள் மீனா அண்ணாதுரை,பிரபா செல்லப்பிள்ளை,பேரூராட்சி தலைவர்கள் சங்கீதாரமேஷ், வள்ளியம்மை ரவிச்சந்திரன்,பாக்கியலட்சுமி செங்குட்டுவன் , மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செளந்தர்யா,மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மகாதேவி ஜெயபால்,கொளக்காநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் என்.ராகவன்,துணை தலைவர்கள், நகராட்சி,பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 10 March 2022 10:31 AM GMT

Related News