பெரம்பலூர் மாவட்டத்தில் 24,082 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த மாபெரும் முகாம்களில் 24.082 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரம்பலூர் மாவட்டத்தில் 24,082 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
X

தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் இன்று 193 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் நடத்தப்பட்டது. ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறையின் களப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் (அங்கன்வாடி பணியாளர்கள்), வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1,200 நபர்கள் பொது மக்களை ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொண்டனர்.

பெரம்பலுர் மாவட்டத்தில் .,இருபத்து நான்காயிரத்து எண்பத்திரண்டு நபர்களுக்கு இன்று 12.09.2021 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமுடன் சிறப்பு முகாம்களுக்கு வந்த பொதுமக்களுக்கு அவர்களது பெயர், அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து நாளை அல்லது நாளை மறுநாள் அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்..

Updated On: 12 Sep 2021 3:53 PM GMT

Related News

Latest News

 1. தியாகராய நகர்
  தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
 2. அந்தியூர்
  அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்
 3. பாளையங்கோட்டை
  நெல்லையில் பாரம்பரிய சரிவிகித உணவு திருவிழா கண்காட்சி
 4. கூடலூர்
  நீலகிரி முதுமலையில் வெளுத்து வாங்கிய கனமழை
 5. சென்னை
  சென்னையில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்...
 6. குளித்தலை
  மருதூர் பேரூராட்சியில் சாலை வசதி கோரும் பொதுமக்கள்
 7. அந்தியூர்
  ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
 8. விளையாட்டு
  டி20 உலககோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில்...
 9. வேலூர்
  வேலூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 16 பேர்...
 10. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 20 பேர்...