Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிய காவலர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய குன்னம் காவல் நிலைய ஆய்வாளருக்கு பாராட்டு.
HIGHLIGHTS

வ.கீரனூர் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் ஏழை மாணவர்கள் குடும்பத்திற்கு மளிகை பாெருட்களை காவல் ஆய்வாளர் ரவீந்திரன் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டம் வ.கீரனூர் கிராமத்தில் கொரோனாவால் தனது தந்தையை இழந்து வறுமையில் வாடும் சுவாதி என்ற மாணவியின் குடும்பத்திற்கும், புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கொரோனாவால் தனது தாயை இழந்து வறுமையில் வாடும் வினோத் என்ற மாணவனின் குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை குன்னம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரவீந்திரன் வழங்கினார்.
மேலும் ஏதேனும் உதவி வேண்டுமானால் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என அன்பு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.