பெரம்பலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு

பெரம்பலூர் அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரம்பலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு
X

பெரம்பலூர் அரசு பள்ளி மாணவிகளிடம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரும்பாவூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் அரும்பாவூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவல் நிலைய காவலர்கள், ஆட்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மாணவ மாணவிகளிடம் தன்னுடன் பயிலும் சக நண்பர்களுடன் எவ்வாறு பழக வேண்டும் என்றும் ஏதேனும் பிரச்சினை என்றால் தயங்காமல் உங்களது பெற்றோர்களிடமோ, நண்பர்களிடமோ அல்லது பள்ளி ஆசிரியர்களிடமோ கூறுங்கள் என அறிவுரை வழங்கினார்கள்.

மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Updated On: 14 Oct 2021 4:21 AM GMT

Related News