/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் திட்டப்பணிகளை கலெக்டர்  ஆய்வு
X

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் திட்டப்பணிகளை கலெக்டர் வெங்கடபிரியா ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வடக்குமாதவி - கீழக்கரை பகுதியில் தேசிய தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் சார்பில் விவசாயி அத்தியப்பன் என்பவர் ரூ.1.77 இலட்சம் மானியத்தில் நிழல்வலைக்குடில் சாகுபடி முறையில் கீரை வகைகள் மற்றும் நாற்றங்கால் உற்பத்தி செய்து வருவாய் ஈட்டி வருகிறார். அவரது நிழல்வலைகுடில் பகுதியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீவெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

அதனைத்தொடர்ந்து, வடக்குமாதவி - கீழக்கரை பகுதியில் விவசாயி வேலுமணி என்பவர் 1.85 ஹெக்டர் நிலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள நிலக்கடலைக்கு சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தெளிப்பு நீர் பாய்ச்சும் முறையையும், விவசாயி ஜெய் தினேஸ் என்பவர் நிலத்தில் பண்ணை குட்டை அமைத்து உட்புறம் பாலித்தின் தார்ப்பாய் விரித்தமைக்கு, ரூ.75,000 மானியத்தில், பண்ணை குட்டையில் சேகரமாகும் மழைநீர் கொண்டு,சாகுபடி செய்துவரும் தோட்டக்கலை பயிர்களான முருங்கை தென்னை மற்றும் எலுமிச்சைக்கு நீர் பாய்ச்சி, மேலும் உபரி வருவாய் ஈட்டும் பொருட்டு குட்டையில் சேகரிக்கப்பட்ட மழைநீரில் மீன்குஞ்சுகள் வளர்த்து வரும் முறையையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

பின்னர் எசனை கிராமத்தில், விவசாய உற்பத்தியாளர் நிறுவன குழுமத்தின் மூலம், வேளாண் விளைபொருட்கள் ரூ.10 இலட்சம் மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம், கடலை உரிக்கும் இயந்திரம், எண்ணெய் செக்கு உள்ளிட்ட பல்வேறு மதிப்புக் கூட்டும் எந்திர மையத்தினை திறந்து வைத்து பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில், நவீன முறையில் பருத்தி சாகுபடி குறித்தும், 1 மீட்டர் இடைவெளியில் பருத்தி சாகுபடி செய்வதன் மூலம் நவீன முறையில் களை எடுப்பது, மருந்து தெளித்தல் குறித்து செயல் விளக்கமாக மாவட்ட ஆட்சியரின் முன்பு செய்து காண்பிக்கப்பட்டது. நவீன முறையில் பருத்தி சாகுபடி செய்வது தொடர்பான கையேட்டினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். மேலும் இளங்கலை விவசாயம் படிக்கும் மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) .கருணாநிதி, துணை இயக்குநர்கள் பாத்திமா, ஏழுமலை, பாபு, உதவி இயக்குநர் (வேளாண்மை பொறியியல்துறை) இலாட்வின் இஸ்ரேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) பூவலிங்கம், உதவி செயற்பொறியாளர்(வேளாண்மை பொறியியல்துறை) அறிவழகன், வேளாண்மை உதவி இயக்குநர் பச்சையம்மாள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Sep 2021 4:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!