Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் அருகே குளிக்க சென்ற பள்ளி மாணவன் குளத்து நீரில் மூழ்கி பலி
பெரம்பலூர் அருகே குளத்தில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த பாரதிராஜா.
பெரம்பலூர் அருகே உள்ள பெரிய வெண்மணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சின்ன வெண்மணி கிராமத்தில் வசித்து வருபவர் பாலாஜி. அவரது மகன் பாரதிராஜா சின்ன வெண்மணி கொத்தவாசல் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த வேலன் என்பவரின் குட்டையில் குளிப்பதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடி பார்க்கும் பொழுது நீரில் மூழ்கி இறந்துள்ளார். சிறுவனின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.