/* */

கிணற்றில் தத்தளித்த பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறை

குன்னம் அருகே இரண்டு மணி நேரம் கிணற்றில் விழுந்து தத்தளித்த பசு மாட்டை உயிருடன் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

கிணற்றில் தத்தளித்த பசு மாட்டை  உயிருடன்  மீட்ட தீயணைப்புத்துறை
X

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வயல் கிணற்றில் விழுந்து தத்தளித்த பசு மாட்டை  தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள காருகுடி கிராமத்தில் நேற்று மாலை சுமார் நான்கு மணி அளவில் செல்லியம்மன் கோயில் அருகே மாணிக்கம் என்பவரின் வயலில் உள்ள கிணற்றில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மகேந்திரன் என்பவரின் பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாரத விதமாக அங்கே இருந்த கிணற்றில் பசு மாடு தவறி விழுந்தது சுமார் இரண்டு மணி நேரம் நீரில் தத்தளித்து வந்த பசுமாட்டை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து உடனே மாட்டை மீட்க போரடி வந்தனர்.

இந்நிலையில் வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயைணப்பு துறையினர் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா உத்தரவின்படி, பொறுப்பு தீயணைப்பு துறையினர் தலைவர் கரிகாலன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் தத்தளித்து வந்த பசு மாட்டை மீட்டனர்.

இந்தமீட்பு பணியில், தீயணைப்புத்துறையினர் சக்திவேல், ராஜா, ஆகியோர் உடனிருந்தனர் மீட்கப்பட்ட பசு இன்னும் ஓரிரு மாதங்களில் இளம் பசு ஈன்றெடுக்கப் போவது என்பது என்பது குறிப்பிடத்தக்கது. பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

Updated On: 3 July 2021 5:12 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து