/* */

பெரம்பலூரில் காணாமல் போனவர், ஏரியில் பிணமாக மிதந்தார்

பெரம்பலூரில் காணாமல் போனதாக கருதப்பட்டவர், ஏரியில் பிணமாக மிதந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நமையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இராஜேந்திரன் (52) என்பவரை கடந்த ஏப்.17 ஆம் தேதி காணவில்லை என அவரது மனைவி பச்சையம்மாள் மற்றும் மகள் ராதிகா ஏப்.18 அன்று மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால் அந்த மனுவினை வாங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்கள் இதனை தொடர்ந்து ஏப்.19 அன்று மீண்டும் மாயமான ராஜேந்திரனை கண்டுபிடித்து தர வேண்டுமென மங்களமேடு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர் அன்று மனுவை வாங்க வேண்டிய அதிகாரி இல்லாததால் இரவு 8 மணி வரை காத்திருந்தனர்.

அதன் பின்பு ஒருவழியாக மனுவை வழங்கி விட்டு வீடுதிரும்பிய நிலையில் ஏப்.20 பிற்பகலில் நமையூர் ஏரியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கிடப்பதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

ஏரியில் கிடந்த சடலத்தை பார்வையிட்ட போது இது ராஜேந்திரனின் உடல் என தெரியவரவே அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த காவலர்கள் உடலை மேற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 3 தினங்களுக்கு மேலாக ராஜேந்திரனை தேடி வந்த குடும்பத்தினருக்கு இவர் சடலமாக மீட்கப்பட்டதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதென்றும் காணாமல் போனதிலிருந்தே காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வந்த நாளில் இருந்தே அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வந்ததாலே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதென தெரிவித்தார்கள்,

இனி மேற்பட்டு நடத்தப்படும் விசாரணைகளை உயர் மட்ட அதிகாரிகள் எடுத்து நடத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து மங்களமேடு ஞிஷிறி மோகன்தாஸ் மற்றும் பெரம்பலூர் ஞிஷிறி சரவணன் அவர்களும் நடந்த இச்சம்பவம் தொடர்பாக தாம் நேரடி விசாரணை நடத்தி சம்பவம் தொடர்பான விளக்கத்தை விரைவில் தெரிவிப்பதாகவும் ஒருவேளை இது கொலை என தெரிய வந்தால் நிச்சயம் குற்றவாளிகளை பிடித்து தண்டனை வாங்கி தரப்படும் என அளித்த உறுதியின் பேரில் குடும்பத்தினர் ராஜேந்திரன் உடலை பெற்றுக்கொண்டனர்.

Updated On: 21 April 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...