பெரம்பலூர் அருகே வயல்வெளியில் மின்சாரம் தாக்கி தந்தை- மகன் பலி

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வயல்வெளியில் மின்சாரம் தாக்கி தந்தை -மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் ( 42). விவசாயி.இவரது விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டு உள்ளார்.வயல் வனப்பகுதி அருகே உள்ளதால் வன விலங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளதாம். இதன் காரணமாக, வயலை சுற்றி மின் வேலி அமைத்து உள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை செந்தில் தனது மகன் தர்மராஜூடன் (15) வயலுக்குச் சென்ற போது இவரது வயலில் போடப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாராத விதமாக செந்தில் மீது மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து இறந்து கிடந்துள்ளார். தந்தை இறந்தது அறியாமல் அவரது மகன் தர்மராஜ் தொட்டுள்ளார்.இதில் மின்சாரம் தாக்கி அவரும் உயிரிழந்தார்.

மாலை வயல் பகுதிக்கு சென்ற தந்தையும் மகனும் வீட்டுக்கு வராததை கண்டு அவரது உறவினர்கள் உடனடியாக வயல் பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர் அப்போது மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து இச்சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த மருவத்தூர் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுUpdated On: 15 Oct 2021 4:32 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  ஓர்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது பேரழிவு தரும்: முன்னாள்...
 2. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகள், குரங்குகளை...
 3. சினிமா
  தசரா படம் எப்படி இருக்கு?
 4. சினிமா
  viduthalai படம் எப்படி இருக்கு? விடுதலை திரைவிமர்சனம்
 5. தமிழ்நாடு
  நெல் கழிவுகளிலிருந்து சிறப்பு மின்தேக்கிகள்: சென்னை ஐஐடி...
 6. சினிமா
  பத்து தல படம் எப்படி இருக்கு?
 7. நாமக்கல்
  10ம் வகுப்பு பொதுத்தேர்வு: அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல்...
 8. இந்தியா
  4 குட்டிகளை ஈன்ற நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தை
 9. இந்தியா
  அதானி-ஹிண்டன்பர்க் பிரச்சினையில் செபி கருத்து தெரிவிக்காது
 10. சேலம்
  சங்ககிரியில் இன்று 3ம் கட்ட "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி