Begin typing your search above and press return to search.
ஆ.ராசா மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது குன்னம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு.
HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் பழனிச்சாமியை ஆபாசமாக பேசியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது குன்னம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு.
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் கடந்த 26 ஆம் தேதி நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலர் ஆ.ராசா பேசுகையில், தமிழக முதல்வர் குறித்து ஆபாசமாகவும் தரக்குறைவாக பேசியதாகவும் குன்னம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் ஆ.ராசா மீது 153, 294 b, 127 (1), கலகம் செய்ய தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், தேர்தல் விதிமீறல் ஆகிய பிரிவுகளின் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.