/* */

பெரம்பலூர்: சிறப்பு முகாம்களில் 13,195 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் மாவட்டத்தில் 12-வது கட்டமாக நடந்த சிறப்பு முகாம்களில் 13,195 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர்: சிறப்பு முகாம்களில் 13,195 பேருக்கு  கொரோனா தடுப்பூசி
X

கொரோனா தடுப்பூசி முகாமை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திடும் வகையில் பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1,000க்கும் மேற்பட்ட நபர்கள் பொது மக்களை ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 12 வது கட்டமாக 190 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 84 நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் விதமாக பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 3665 நபர்களுக்கும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 1731 நபர்களுக்கும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 3696 நபர்களுக்கும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 4103 நபர்களுக்கும் என பெரம்பலுர் மாவட்டத்தில் மொத்தம் 13195 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முன்னதாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட எளம்பலூர் சாலை திருவள்ளுவர் தெரு பகுதி அங்கன்வாடி மையம், முத்துநகர்(கிழக்கு) அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு தடுப்பூசி மையங்களை மாவட்ட ஆட்சிய ர் ப.ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Updated On: 28 Nov 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?