/* */

பெரம்பலூரில் சட்ட பாதுகாப்பினை அறிந்து கொள்ள விழிப்புணர்வு நாடகம்

பெரம்பலூரில் சட்ட பாதுகாப்பினை அறிந்து கொள்ள விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் சட்ட பாதுகாப்பினை அறிந்து கொள்ள விழிப்புணர்வு நாடகம்
X

பெரம்பலூரில் சட்ட விழிப்புணர்வு நாடகம் நடந்தது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் வழிகாட்டுதலின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்திடவும், சட்ட பாதுகாப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும் தெருமுனை நாடக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் குன்னத்தில் நடைபெற்றன.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, செயலாளார்/சார்பு நீதிபதி ஆர்.லதா, தலைமையில் திருச்சி கலைக் காவிரி கல்லூரி பேராசிரியர் சதீஸ்குமார் ஒருங்கிணைப்பில் இசை மற்றும் நடனம் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் தெரு நாடகத்தின் மூலம் பெண் கல்வியின் அவசியத்தையும், குழந்தைத் திருமணத்தினை தடுத்திடவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு குறித்தும், பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளின் சட்ட வழிகள் குறித்த வழிமுறையினையும், கதைகள் மூலமாகவும், நாடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகளை பாடியும் மக்களிடயே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர் முனிக்குமார் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் சிவகாமசுந்தரி, குன்னம் காவல் ஆய்வாளர், பெரம்பலூர் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர்கள். வழக்கறிஞர்கள் சங்கர் மற்றும் ராமசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 3 March 2022 4:19 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?