/* */

விமானக் கட்டணம் உயர்வு : பயணிகள் அதிர்ச்சி

விமான கட்டணம் சுமார் மூன்று மடங்கு உயர்ந்திருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

HIGHLIGHTS

விமானக் கட்டணம் உயர்வு : பயணிகள் அதிர்ச்சி
X

கோப்புப்படம் 

சென்னையில் இருந்து கோவை, தூத்துக்குடி, மதுரை செல்லும் விமானங்களுக்கான கட்டணம் சுமார் மூன்று மடங்கு உயர்ந்திருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை விடுமுறை, ரம்ஜான் பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் கார்களின் பயணிப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனை பயன்படுத்தி விமான நிறுவனங்கள், டிக்கெட் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தி உள்ளன.

சென்னையில் இருந்து வழக்கமாக தூத்துக்குடிக்கு ரூ. 3,685 கட்டணம் இருக்கும். ஆனால் தற்போது கட்டணம் 10,000 ரூபாயை தாண்டி இருக்கிறது.

இதேபோன்ற நிலைமையே சென்னை, மதுரை, கோவை செல்லும் விமானங்களுக்கும் நீடிக்கிறது. தொழில் நகரமான கோவைக்கு ஏழு விமானங்கள் வரை சென்னையில் இருந்து விடப்படுகின்றன. இதுவரை ரூ. 3,400 என்கிற அளவில் இருந்து வந்த விமானக்கட்டணம், தற்போது 5,600 முதல் 12,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு செல்வதற்கான கட்டணம் ரூ. 8,500 முதல் ரூ.10,000 வரை அதிகரித்துவிட்டது. இந்த திடீர் கட்டண உயர்வால் விமான பயணிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

Updated On: 22 April 2023 6:54 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  3. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  9. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?